பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்பது தீர்வுக்கு வழிவகுக்கும்
நடந்துவரும் இராணுவ நடவடிக்கை யில் புலிகள் அடைந்துள்ள தோல்வி இலங்கையின் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்துகி ன்றது. தனிநாடு அமைவது சாத்தியம் என்ற பிரசாரத்தை நம்பியிருந்தவர்கள் அது வீணான நம்பிக்கை என்பதை இப்போது நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.
அரசியல் தீர்வின் ஆரம்பமாக இன்றைய நிலையில் பதின்மூன்றாவது திருத்தம் இருப்ப தைப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் பதின்மூன்றாவது திருத்தத்தை ஏற்க முடியாது என்கின்றனர். கூட்டமைப்புத் தலைவர்களின் இந்த நிலைப்பாடு அரசியல் தீர்வைத் தவிர் ப்பதற்கான தந்திரோபாயமாகவே தெரிகின்றது.
அண்மைக்காலமாக இவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்பட்டு வருபவர்கள். அந்த நிகழ்ச்சி நிரல் மீதுள்ள விசுவாசத்தினால், அரசியல் தீர்வு முய ற்சியைத் திசைதிருப்பும் தந்திரோபாயமாகப் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிக்கின் றார்களா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகி ன்றது.
இனப் பிரச்சினை இலங்கை அரசியலில் புரை யோடிய பிரச்சினையாக உள்ளது. அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகள் காரணமாக இனப் பிரச்சினை இனங்களுக்கிடையே ஆழமான சந்தேகத்தை தோற்றுவித்திருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
யதார்த்தத்திலிருந்து விலகி நின்றுகொண்டு அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதில் அர்த்தமி ல்லை. தீர்வு முயற்சியின் இன்றைய நிலை, மக்களின் இன்றைய நிலை என்பனவற்றைக் கவனத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வு முயற்சியே பலனளிப்பதாக அமையும்.
அரசியல் தீர்வு முயற்சி இன்று பின்னடைவு கண்டிருக்கின்றது. அரசியல் தீர்வைப் பிரிவி னையின் ஆரம்ப கட்டமாகச் சந்தேகிக்கின்ற மனோபாவம் சிங்கள மக்கள் மத்தியில் வளர்ந்திருக்கின்றது. இந்த நிலை உருவாகிய தற்குத் தமிழ்த் தலைவர்களே முழுக்க முழு க்கப் பொறுப்பாளிகள்.
பொதுசன ஐக்கிய முன் னணியின் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்ட காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவான மனோநிலை நிலவியது.
ஆரம்பத் தில் அத் தீர்வுத் திட்டத்துடன் தங்களை இனங் காட்டிய தமிழ்த் தலைவர்கள் இறுதி நேரத் தில் எதிர்த்தது மாத்திரமன்றிப் புலிகளின் அணி யில் இணைந்து செயற்பட்டதால், தமிழ்த் தலைவர்களின் அரசியல் தீர்வுக் கோரிக்கை க்குப் பின்னால் தனிநாட்டு இலக்கு இருக்கி ன்றதென்ற சந்தேகம் சிங்கள மக்கள் மத்தியில் வளரத் தொடங்கியது. இந்த நிலையில் முழு மையான அரசியல் தீர்வை முன்வைத்து மக் களின் அங்கீகாரத்தைப் பெறுவது நடை முறைச் சாத்தியமற்றது.
மக்களின் இன்றைய நிலை பற்றியும் சிந்திக்க வேண்டும். தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பித்ததைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்கள் வரலாற்று ரீதியான வாழ்புலங்களிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இவர்கள் இன்று தற்காலிக இருப்பிடங்களிலும் அகதி முகாம்களிலும் துயர வாழ்க்கை வாழ்கின்றனர். இம் மக்கள் தாமதமின்றித் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று வழமையான வாழ்க்கைத் தொழில்களை ஆரம்பிக்க வேண்டும்.
பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்த த்தை நடைமுறைப்படுத்துவது இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும் பிச் செல்வதற்கு வழிவகுக்கும். முழுமையான அரசியல் தீர்வுக்குப் பாராளுமன்றத்தில் மூன் றிலிரண்டு பெரும்பான்மை பெறுவதற்கும் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரம் பெறுவதற்கும் சாதகமற்ற சூழ்நிலை நிலவுவ தால் பதின்மூன்றாவது திருத்தத்தை உடனடி யாக நடைமுறைப்படுத்துவது புத்திசாலித் தன மானது.
இத் திருத்தம் ஏற்கனவே பாராளும ன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதால் எவ்வித சிரமமுமின்றி இதை நடைமுறைப் படுத்த முடியும். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற் கும் மாகாண மட்டத்தில் ஓரளவு அதிகாரப் பகிர்வு இடம்பெறுவதற்கும் வழிவகுக்கும் என் பதால் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் அரசியல் தீர்வின் ஆரம்பமாக அமை வதற்குப் பொருத்தமானதே.
இதன் மூலம் மக்கள் புதிய அதிகாரங்களைப் பெறுவார்களே யொழிய எதையும் இழக்கப் போவதில்லை. மாகாண சபையை ஏற்றுச் செயற்படுகின்ற அதேவேளை முழுமையான அரசியல் தீர்வுக்காகத் தொடர்ந்து முயற்சிக்க முடியும்.
பொதுசன ஐக்கிய முன்னணியின் தீர்வுத் திட்டத்தை நிராகரித்ததால் ஏற்பட்ட பின்ன டைவைப் பாடமாகக் கொண்டு, பதின்மூன் றாவது திருத்தத்தை அரசியல் தீர்வின் ஆரம்ப கட்டமாக ஏற்பதுதான் ஆக்கபூர்வமான அணுகு முறை.
Thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment