‘பிரபாவை கைது செய்வதே இலக்கு’
புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்வதே தற்போதைய முக்கிய விடயமாக இருக்கிறதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினர் புதுக்குடியி ருப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.
படையினர் பெற்ற வெற்றி சிறப்பானதாகும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளத்திற்கு இந்தக் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
புலிப் பயங்கரவாதிகளிடமிருந்த கடைசி நிலப்பரப்பும் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேவேளை, தொடர்ந்தும் முன்னேறி வரும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிப்பதற்காக விமானப் படையினர், மற்றும் கடற்படையினர் ஆற்றிய சேவைகளை பாதுகாப்புச் செயலாளர் பாராட்டியுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment