பிரபாகரன் தனது தலைவிதியை இன்னும் சில மணித்தியாலயங்களின் சந்திப்பார் - இராணுவத் தளபதி
புலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும் என தொலைக்காட்சிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
படையினர் இன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் இறுதி மணல் அணையை உடைத்து மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்றைய இந் நிகழ்வு மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment