வன்னியில் கனரக ஆயுத யுத்தத் தவிர்ப்பை இலங்கை அரசு அறிவிப்பு; கலைஞர் உண்ணா விரதம் முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவிப்பு
ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ விசேட அறிக்கையில், “இராணுவ நடவடிக்கைகள் முடியும் தறுவாயில் உள்ளன. பொது மக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள், போர் விமானங்கள், வான் தாக்குதல் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டாமென எமது பாதுகாப்புப் படையினருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி இன்று (ஏப். 27) அதிகாலை அண்ணா நினைவிடத்துக்குச் சென்ற மு. கருணாநிதி திடீரென உண்ணா விரதப் போராட்டத்தில் குதித்தார்.
’’இன்று கூடிய இலங்கை பாதுகாப்புக் கவுன்சில் மோதல்களை நிறுத்துவது குறித்து ஆராய்ந்துள்ளது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்துள்ளதால் உண்ணாவிரதப் போராட்டத்தை நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்” என மு. கருணாநிதி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
அதேநேரம், உண்ணா விரதத்தில் ஈடுபட்டிருந்த மு. கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோர் உண்ணா விரதப் போராட்டத்தைக் கைவிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தார்கள்
0 விமர்சனங்கள்:
Post a Comment