’பீப்பிள்ஸ் எய்ட்’ நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளுக்கு வீசா ரத்து
நோர்வேயை பின் தளமாகக் கொண்ட ’பீப்பிள்ஸ் எய்ட்’ நிறுவனத்தின் மூன்று அதிகாரிகளை உடனடியாக இலங்கையில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் நேற்று (ஏப். 29) உத்தர விட்டுள்ளது. சமாதான பேச்சு காலகட்டத்தில் வபுலிகளுக்கு 36 வாகனங்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட இவர்களின் வீசா அனுமதிகள் நேற்று ரத்துச் செய்யப்பட்டன.
கைரோஸ், பிலிப் எமினிஸ்ப் மற்றும் பெனனி எரிக்சன் ஆகிய மூவரையும் இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் கைரோஸ் என்பவர் பிரித்தானிய பிரஜையாவர். இவர்கள் இலங்கையில் தொடர்ந்து தங்கியிருக்க எடுக்கப்பட்ட உயர் ராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் பயனளிக்காத நிலையில் மூன்று அதிகாரிகளும் இன்று (ஏப். 30) இலங்கையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 விமர்சனங்கள்:
Post a Comment