இலங்கை யுத்தம் குறித்து செய்தி வழங்குவதில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இடர்கள்

வடக்கு போர் முனைக்கோ அல்லது போர் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இலங்கை அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ள மக்கள் இருக்கும் இடத்துக்கோ சென்று செய்தி சேகரிப்பதற்கு சுதந்திரமான, சுயாதீனமான வழிகள் எதுவும் கிடையாது.
இலங்கை பற்றிய தகவல்களை பெறுவதற்கான தினசரி செய்தி ஆதாரங்கள் எவை என்று பார்த்தால், ஒரு பக்கம் அரசாங்கம் தரும் தகவல்கள் மறுபக்கம் விடுதலைப் புலிகளுக்கு அனுதாபம் காட்டும் இணையதளங்கள் தரும் தகவல்கள் மாத்திரந்தான்.
அங்கு களத்தில் நடக்கும் போருக்கு சமாந்தரமாக, இருதரப்பாலும் ஒரு பிரச்சாரப் போரும் நடத்தப்படுகின்றது. விபரங்களை உறுதிப்படுத்துவது என்பது அங்கு அசாத்தியமானது.
தெற்காசிய விவகாரங்களை கையாளும் பல செய்தியாளர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கான விசாவை பெற முடியாத நிலை காணப்படுகிறது.
சிலர் சுற்றுலாப் பயணிகள் போன்று இலங்கைக்கு செல்ல முயற்சித்தார்கள். ஆனால், அவர்கள் விமான நிலையத்திலிருந்தே திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
மோதல்கள் நடக்கும் வடபகுதிக்கு செல்ல முயற்சித்த பலர் போர் வலயத்துக்கு நீண்ட தூரத்தில் இருக்கும் பல தொடர்ச்சியான சோதனைச் சாவடிகளில் வழி மறிக்கப்படுகிறார்கள்.
உள்ளூர் செய்தி ஊடகங்களில் இருக்கும் விமர்சகர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். கடந்த சில வருடங்களில் பல சுதந்திர ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களைப் பொறுத்தவரை, இலங்கையில் இருந்து செய்தி சொல்வதற்கு மிகவும் சவாலான காலப் பகுதியாக இது அமைந்துள்ளது.
BBC Tamil






0 விமர்சனங்கள்:
Post a Comment