காயமடைந்த பிரபாகரனின் மகனை மலேஷியாவுக்குக் கொண்டு செல்ல முயற்சி சொர்ணத்தின் ஒரு கால் அகற்றப்பட்டது
![]()
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் அண்மையில் இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே இடம்பெற்ற மோதலின்போது படுகாயமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்டனியை மேலதிக சிகிச்சைக்காக மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல புலிகள் முயற்சிப்பதாகத் தெரியவருகிறது.
சார்ள்ஸ் அன்டனியின் தோள்பட்டையிலும் முதுக்குப் பகுதியிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இரணைப்பளையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் வேறொரு தாக்குதலில் காயமடைந்த சொர்ணம் என்பவரின் கால் ஒன்று சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்புப் பிரிவுக்கும் ராதா படையணிக்கும் பொறுப்பாகவிருந்த ரட்ணம் மாஸ்டர் விமானப்படையினரின் தாக்குலில் கொல்லப்பட்டமை தற்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment