விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் போர் குற்றவாளி : இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்
விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என இந்திய பிரதமர் மன் மோகன் சிங் “டைம்ஸ் நவ் தொலைகாட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலி இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் ” விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி . அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை”என தெரிவித்திருந்தார்.
தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியிந்தார்” என பிரதமர் மன் மோகன் சிங் டைம்ஸ் நவ் தொலக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்.”பிரபாகரன் நல்ல நண்பன் ” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்திற்கே மன்மோகன் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
“கருணநிதியின் கருத்து அவரது தனிப்பட கருத்தாகும். ஆனால் காங்கிரஸின் நிலைப்பாடானது விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி ” என காங்கிரஸ் கட்சி பேச்சாளர் கபில் சிபால் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment