யுத்த சூனியப் பிரதேசத்தினுள் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்.
பாதுகாப்புப் பிரதேசத்தை நான்கு முனைகளில் சுற்றிவளைத்தும் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணை போன்ற பகுதிகளை மிக நெருக்கியுமுள்ள படையினர் புலிகளை சரணடையுமாறும் மக்களை சுதந்திரமாக வெலியேற அனுமதிக்குமாறும் ஒலிபெருக்கிகள் மூலம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
இன்று (ஏப். 08) பிற்பகல் இறுதியாக விடப்பட்ட அவ்வாறான அறிவிப்புக்கு பின் பாதுகாப்பு பிரதேசத்தில் பாரிய குண்டு வெடியோசைகள் கேட்டதாக பாதுகாப்பு தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னியில் யுத்தத்தில் சிக்கியுள்ள பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படையினரால் முல்லைத்தீவு பிரதேசத்தில் புதுமாத்தளனில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான 12 கி.மீ நீளமான கடலோர நிலப்பரப்பு பாதுகாப்புப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த புதுக்குடியிருப்புக்கு கிழக்காக இருந்த ஒரு சிறிய துண்டு நிலத்தையும் படையினரிடம் இழந்துவிட்டு, மக்களின் `பாதுகாப்பு பிரதேசத்தை` தமது கடைசி ஒளிவிடமாக்கியுள்ள புலிகள் அங்குள்ள மக்களை தமக்கு மனித கேடயமாக்கியுள்ளனர்.
அப்பிரதேசதில் படையினர் மக்களை வெளியேறுமாறு விடுத்த அறிவித்தல் அவர்களின் காதுகளை எட்டிய தருணத்தில் மக்கள் அங்கிருந்து வெளியேற முற்படுவதை தடுப்பதற்காக புலிகள் ஏதாவதொரு சதி முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும் என தெரியவருகின்றது.
Loud explosions heard in Sri Lanka's no fire zone
COLOMBO, April 8 (Xinhua) -- The military in Sri Lanka said loud explosions were heard Wednesday afternoon in the no fire zone declared by the government for the safety of war displaced civilians after the final announcement were made to Tamil Tiger rebels to release civilians.
The Ministry of Defense said in a statement that several loud explosions have been heard in the no fire zone soon after the Army made the final announcement for the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to release the civilians still trapped there.
"Army suspects that the terrorists have launched some sort of an attack at the civilians who tried to escape their rule," said the statement.
The Army has made announcement using loudspeakers positioned few hundred meters short of the western border of the no fire zone.
Aid agencies said that a large number of civilians are still being trapped in the no fire zone and called on both the warring parties to refrain from attacking civilians.






0 விமர்சனங்கள்:
Post a Comment