அலம்பில் கடற்பரப்பில் மோதல்: புலிகளின் தற்கொலைப் படகுகள் அழிப்பு
அலம்பில் கடற்பரப்பில் இன்று அதிகாலையில் கடற்படையினருக்கும் கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் அணியினருக்குமிடையே பாரிய மோதல் ஏற்பட்டதாகப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் அலம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகுகள் மூன்றும் அதற்குத் துணையாக சாதாரண படகுகள் ஏழும் செல்வதனை அவதானித்த கடற்படையினர் தற்கொலைப் படகுகள் மீது முதலில் தாக்குதலை மேற்கொண்டனர் இந்தத் தாக்குதலின் போது இரு தற்கொலைப் படகுகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டதாகவும் மூன்று படகுகள் சேதமடைந்ததாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இதன் பின்னர் இந்தக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது புலிகளின் ஏழு சடலங்களை மீட்டுள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment