சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று முதல் நலன்புரி நிலையங்களில் உள்ளவர்களை உறவினர்கள் சென்று சந்திக்க ஏற்பாடு
சித்திரைப் புத்தாண்டு தினமாகிய எதிர்வரும் 14 ஆம் திகதி முதல், நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை, அவர்களது உறவினர்கள் சென்று பார்வையிட்டு, உரையாடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள், உறவினர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து, வவுனியா செயலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் இதுபற்றிய தகவலை வெளியிட்டிருந்தார் என்பதும், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு நலன்புரி நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment