பயங்கரவாதத்தை எதிர்த்து போராட தாய்லாந்தின் உதவி
இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ. க்கு எதிரான இராணுவ வெற்றியைத் தொடர்ந்து இப் பயங்கரவாதம் பிராந்தியம் மற்றும் அதற்கு வெளியேயும் பரவ இடமுண்டு என்பதனால் அதற்கேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனான இலங்கையின் வேண்டுகோளுக்கு தாய்லாந்திடமிருந்து மிக வலுவான ஆதரவு இன்று (2009.03.26) கிடைத்துள்ளது.
பயங்கரவாதிகள் பிராந்தியத்தில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்னும் இலங்கையின் விசனப்பாடுகளையிட்டு தான் கரிசனை கொண்டுள்ளதாக கூறிய தாய்லாந்து பிரதமர் அபிசிற் வெஜ்ஜாஜிவா நண்பர்களைச் சீர்குலைக்க தமது முக்கியமாக நீண்டகால கலாசார மற்றும் சமய சார்பு தொடர்புகளைக் கொண்டுள்ள மிகவும் நெருங்கிய நண்பராகக் கருதப்படும் இலங்கையின் நட்புறவைச் சீர்குலைக்க நாட்டை உபயோகப்படுத்த தாய்லாந்து ஒரு போதும் அனுமதியளிக்காது என மீளுறுதி அளித்தார்.
எங்கள் எல்லோரினதும் நன்மைக்காகவே பயங்கரவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பிரதம மந்திரி அபிசிற் கூறினார்.
எல்.ரீ.ரீ.ஈ. ஆனது புது காப்பகங்களைத் தனக்கு ஏற்படுத்த முயலுகின்றது என்றும் தொடர்ந்து ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் வர்த்தகம், ஆட்களை நாடுகளுக்குக் கடத்தல் மற்றும் வெள்ளைப் பணமாக்கல் முதலிய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படும் அபாயங்களையிட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்களுடனான தாய்லாந்து பிரதமர் அவர்களின் அரை மணித்தியால சந்திப்பின்போதே பிரதம மந்திரி இவ்வாறு கூறினார். பயங்கரவாதம் எவ்வுருவத்தில் அமைந்தாலும் அது களைந்தெறியப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அமைச்சர் போகொல்லாகம அவர்கள் ஒருநாள் இருதரப்பு விஜயமொன்றை மேற்கொண்டு பிரதம மந்திரி வெஜ்ஜாஜிவா அவர்களை பாராளுமன்றத்தில் சந்தித்ததுடன் அவரது சகபாடியான வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கசிற் பிறொம்யா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிறாவிற் வொங்சுவொன் ஆகியோரையும் சந்தித்தார்.
எல்.ரீ.ரீ.ஈ. இன் மிகுதியான சிதறல்கள் புது இடங்களில் அமைப்புகளை அமைக்க முயல்வதோடல்லாமல் பிற பயங்கரவாத குழுக்களுடன் கைகோர்த்தியங்க முடியுமென்பதோடல்லாது தங்களது பயங்கரவாத சாதுர்யங்கள் மற்றும் நிபுணத்துவங்களை வழங்கி கூலிப்படையாகவும் மாற இடமுண்டு என்ற கரிசனை தாய் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் ஓர் எதிரொலியை ஏற்படுத்தியது.
இப்படியான விடயங்கள் பற்றிய தகவல்களை தாய்லாந்து அதிகாரிகளுக்குத் தந்துதவும்படி இலங்கையை பிரதம மந்திரி விஜேஜாஜிவா அவர்கள் கேட்டுக்கொண்டார்.
எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்திற்கு தாய்லாந்து தளமாக இருப்பதற்கு அனுமதிக்காது என்னும் பிரதம மந்திரியின் கூற்றை பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பிறவிற் வொங்சுவொன் இலங்கைக்கு மீளுறுதியளித்தார். இலங்கை கணிசமானளவு அரசியல் ஸ்திரப்பாட்டை எட்டியுள்ளதைக் கேட்டு தான் மகிழ்ச்சி கொள்வதாகப் பிரதம மந்திரி கூறினார்.
பலகாலமாக முக்கியமாக வடக்கில் மறுக்கப்பட்டிருந்த அரசியல் பல்லினத் தன்மையை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி முன்பு எடுத்துக் கூறியிருந்த அமைச்சர் போகொல்லாகம அவர்கள் இதனை எய்தும் நோக்காக தமிழ் அரசியல் கட்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார் என கூறினார்.
நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் மக்களின் ஆணையொன்றைப் பெற்றுள்ளது என இலங்கை அமைச்சர் கூறினார். ஆனால் உள்நாட்டில் அரசாங்கம் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தாலும் எல்.ரீ.ரீ.ஈ. வேறு இடங்களில் உருவாக முடியுமென்பதினால் பிராந்தியத்திலும் அதற்கு வெளியேயுமான ஆதரவை அவர் வேண்டி நின்றார்.
இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த இது ஒரு நல்ல தருணம் என அமைச்சர் போகொல்லாகம தாய்லாந்து பிரதம மந்திரிக்கு கூறினார். இரு பகுதியினரும் ஒத்துழைப்பதற்கான பல துறைகள் உள்ளதெனக் கூறினார்.
இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு மேலும் அதிக செயற்பாடுகள் மேற்கொள்ள முடியுமென இணங்கிய பிரதம மந்திரி வெஜ்ஜாஜிவா அவர்கள், முதலீட்டிற்கான துறைகள் அடையாளம் காணப்பட வேண்டுமெனவும் கூறினார்.
விசேடமாக இருநாடுகளையும் ஒன்றிணைக்கும் பெளத்த மத தொடர்பாடல்கள் காரணமாக சுற்றுலாத்துறையை விருத்தி செய்யலாம் என்றார்.
இலங்கை-தாய்லாந்து இணைந்த ஆணைக் குழுவொன்று உள்ளதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் போகொல்லாகம இது மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டுமென்றும் அடுத்த கூட்டத்தை இலங்கையில் நடத்தவும் விருப்பம்தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திரு கசிற் பிறோம்யாவுடனான சந்திப்பின் போதும் இலங்கை அமைச்சர் இணைந்த ஆணைக் குழுவை மீண்டும் செயற்பாடாக்குவதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டுக் காட்டிய அவர் இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஓர்முக்கிய பங்கினை வகிக்க முடியும் என்றார்.
தாய்லாந்து வெளிநாட்டிலுவல்கள் அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் இதுவரை இலங்கை எய்திய வெற்றியையிட்டு தான் உற்சாகப்பட்டுள்ளதாகக் கூறிய பிறொம்யா, வேவுத் தகவல் சேகரிப்பு மற்றும் அதன் பரிமாற்றங்கள் சம்பந்தமாக தற்பொழுதும் இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு உள்ளதெனக் கூறினார்.
பெளத்த தொடர்பாடல்கள் மற்றும் பெளத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களது சொந்த பிரதிபலிப்பைக் காட்டும் கோவில்கள் சமயசார்பு சின்னங்கள், தங்கள் தங்களது மதிப்பைப் காட்டும் புத்தகசாலைகள் அல்லது கற்கை தலங்கள் என்பனவற்றை அடக்குவதான சர்வதேச பெளத்த மத்தியஸ்தானம் ஒன்றை அமைக்கும் இலங்கையின் யோசனை பற்றி தாய்லாந்து பிரதமர் மிகவும் அக்கறை காட்டினார்.
தாய்லாந்து பிரதமர் இது சம்பந்தமாக கவனிக்கும்படி உரிய திணைக்களத்தை வேண்டிக்கொள்வாரெனக் கூறினார்.
கலாசாரத் துறையைப் பொறுத்தவரையில் பரந்தரளவிலான விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் போகொல்லாகம கூறினார். கலந்துரையாடல் பங்காளி ஒருவராக வருவதற்கோ முன்னோடியாக ஆசியானின் துறைசார் பங்காளியாக வருவதற்கு தாய்லாந்தின் ஆதரவையும் கூட அவர் கோரினார்.
இலங்கைத் தூதரகம்
பாங்கொக்
0 விமர்சனங்கள்:
Post a Comment