சிவிலியன்களின் நலனுக்காக புலிகள் சரணடைய வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்த நிறுத்தக் கோரிக்கையை இன்னும் கைவிடுவதாக இல்லை. இந்த இறுதி நேரத்திலாவது அரசாங்கம் யுத்தநிறுத்தத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப் பினர் என். ஸ்ரீகாந்தா அறிக்கையொன்றின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடி க்கை தொடங்கிய ஆரம்ப நாட்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யுத்தநிறுத்தக் கோரிக் கையை முன்வைக்கவில்லை. புலிகளின் தோல்வி நிச்சயம் என்பது தெளிவாகிய நிலையி லேயே கூட்டமைப்புத் தலைவர்கள் யுத்த நிறுத்தக் கோரிக்கையை முன்வைக்கத் தொட ங்கினார்கள்.
யுத்தநிறுத்தம் செய்வது சாத்திய மில்லை என்று அரசாங்கம் திட்டவட்ட மாகத் தெரிவித்த பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் யுத்தநிறுத்தக் கோரிக்கையைக் கைவிடவில்லை. தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். மக்களின் பாதுகாப் புக்காகவே யுத்தநிறுத்தம் கோருவதாக இவர்கள் கூறிய போதிலும் உண்மையான நோக்கம் அதுவல்ல என்பது இரகசியமான தல்ல.
பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி மக்கள் வெளியேறுவதற்குப் புலிகள் அனும திப்பார்களேயானால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகாது என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் கூட்டமைப்பி னர் யுத்தநிறுத்தக் கோரிக்கையையே வலியு றுத்தினார்கள்.
மக்கள் வெளியேறுவதற்குப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று ஒரு தடவையாவது இவர்கள் கோரிக்கை விடுக்க வில்லை. மக்களின் பாதுகாப்பிலும் பார்க்கப் புலிகளின் தோல்வியைத் தவிர்ப்பதிலேயே இவர்களுக்குக் கூடுதலான அக்கறை இருந்த தென்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
புதுக்குடியிருப்பு படையினரிடம் முழுமை யாக வீழ்ந்ததுடன் புலிகள் தங்கள் கட்டுப் பாட்டிலிருந்த நிலப்பரப்பு முழுவதையும் இழந்துவிட்டனர். இப்போது மக்களுக்காகப் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலய த்தில் மக்களோடு மக்களாக இருக்கின்றார் கள். இது அப்பட்டமான மக்கள் விரோதச் செயல்.
இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் பொதுமக்கள் நடுவில் சிக்கிப் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற நோக்கத்துடனேயே அரசாங்கம் பாதுகாப்பு வலயத்தைப் பிரகட னப்படுத்தியது.
புலிகள் பாதுகாப்பு வலயத் துக்குள் சென்று அங்கிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். இப்போது நிலப் பரப்பு முழுவதையும் இழந்த நிலையில் எஞ்சியுள்ள புலிகள் அனைவரும் பாதுகாப்பு வலயத்துக்குள் சென்றுவிட்டார்கள்.
இவர்கள் அங்கு சென்றது தவறு. மோத லில் சம்பந்தப்படாத பொதுமக்கள் பாதுகா ப்பாகத் தங்கியிருப்பதற்காகவே பாதுகாப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்டது. புலிகள் மோதலில் சம்பந்தப்படாதவர்களல்ல. இவர் கள் மோதலில் ஒரு தரப்பினர். இவர்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்வது வேண்டு மென்றே மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத் தலைத் தோற்றுவிக்கும் செயல்.
யுத்தத்தில் புலிகளால் தாக்குப் பிடிக்க முடியாது என்பதில் சந்தேகத்துக்கு இடமே இல்லை. இந்த நிலையில் சரணடைவது தான் அவர்களுக்கு முன்னாலுள்ள ஒரே வழி. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவத ற்கும் அதைத் தவிர வேறு வழி இல்லை.
பாதுகாப்பு வலயத்தில் மக்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதன் மூலம் தோல்வியைத் தவி ர்ப்பதற்கோ யுத்தத்தைத் திசை திருப்பவோ முடியாது. இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் மறைந்திருக்கின்றார்கள் என்பதற்காகப் படை யினர் இவர்களைக் கைப்பற்றும் அல்லது அழிக்கும் முயற்சியைக் கைவிடப் போவதி ல்லை.
மோதல் பிரதேசத்தில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு இந்த முயற்சியில் சிறிய அளவாவது பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகலாம். எனவேதான் புலிகள் பாதுகாப்பு வலயத்துக்குள் இருப்பது மக்கள் விரோதச் செயல் எனக் கூறுகின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கள் நடைமுறைச் சாத்தியமற்ற யுத்தநிறுத்தம் பற்றி இப்போதும் பேசிக்கொண்டிருப்பது வன்னியில் சிக்கியிருக்கும் மக்களின் நலனை முன்னிலைப்படுத்துவதாகாது. மக்களின் நலனில் இவர்களுக்கு உண்மையான அக் கறை உண்டென்றால் புலிகள் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறிச் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment