ஒரு மாதத்திற்கு முன் இறந்தவரை நகர மேயராக தெரிவு செய்த வாக்காளர்கள்

சுமார் ஒரு மாதத்துக்கு முன் இறந்த நகர மேயரை மீளவும் அப்பதவிக்கு வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த விசித்திர சம்பவம் அமெரிக்க வடகிழக்கு மிஸோரியிலுள்ள வின்பீல்ட் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஹரி ஸ்ரோன்பிரேக்கர் (வயது 69) என்ற மேற்படி நகர மேயர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவர் இறப்பதற்கு முன்பே தேர்தல் வாக்குச் சீட் டுகள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 90 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஹரி ஸ்ரோன்பிரேக்கர் வெற்றி பெற்றுள்ளார்.
அவரது போட்டியாளரான அல்டெர்மான் பெர்னி பன்தர் இத்தேர்தலில் 10 சதவீத வாக்குகளை மட்டுமே பெற் றுள்ளார். ஸ்ரோன்பிரேக்கர் இதற்கு முன்பு தொ டர்ந்து 3 தடவைகள் நகர மேயராக பதவி வகித்த வர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 விமர்சனங்கள்:
Post a Comment