பிரபாகரனுக்கு கடைசி அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டார்:ஜனாதிபதி
பிரபாகரனின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கப் படையினர் மிக விரைவில் முடிவு கட்டிவிடுவர்.எமது இராணுவத்தினர் பிரபாகரனை உயிருடன் பிடிப்பர் அல்லது அவருக்கு விரைவில் முடிவு கட்டுவர். இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
பிரபாகரனுக்கு கடைசி அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறிவிட்டார். என்று ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அரசாங்கம் வழங்கிய 48 மணி நேர தாக்குதல் இடைநிறுத்த காலத்தை பிரபாகரன் தக்கவாறு பயன்படுத்தவில்லை. தமிழ்ப் பொதுமக்களைப் தனது “மனிதக் கேடயங்களாகப்” பயன்படுத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் எஞ்சியுள்ள அவரது சகாக்களுக்கும் இராணுவத்திடம் சரண் அடைவதற்கு 48மணி நேர அவகாசம் வழங்கியிருந்தேன். அத்தோடு, 17 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் பொதுமக்களை விடுக்குமாறும் அவரிடம் கேட்டிருந்தேன்.
அவர் அரசாங்கப் படைகளிடம் சரண் அடையவுமில்லை; தான் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்திருந்த பொதுமக்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருவதற்கு அனுமதிக்கவும் இல்லை. அதனால் அவரை இராணுவ ரீதியாக கையாள வேண்டிய நிலை மட்டுமே எமக்கு எஞ்சியுள்ளது. இன்றைய நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டை நாசத்தின் விளிம்புக்குக் கொண்டு வந்திருந்த விடுதலைப்புலிகள் சயினட்டை விழுங்கி தற்கொலை செய்வதா அல்லது முல்லைத்தீவு நீரேரிக்குள் பாய்ந்து தற்கொலை செய்வதா என்பதனை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது என்றார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment