வன்னியில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த ஐ.நா.வை அழைப்பதே ஒரே வழி
இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்ற வகையிலும் குறைந்த பட்சம் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியை பெற்று மேலும் தாமதமின்றி வன்னியில் அகப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தகையவொரு ஒழுங்கு இல்லாத பட்சத்தில் ஐ.நா. சபையை அழைப்பதே எங்களுக்கு ஒரேவழி.
அன்றேல் ஏதாவது நட்பு நாடுகளின் உதவியைப் பெற வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை சம்பந்தமாக அரசின் நிலைப்பாட்டுடன் தன்னால் ஒத்துபோக முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நீண்ட கடிதத்தின் சுருக்கம் வருமாறு:
இலங்கையின் வரலாறு காணாத உணர்ச்சிமிக்க இடம்பெயர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் அசட்டையீனம் காட்ட முடியாது.
நான் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டியதுபோல பல்வேறு வழிவகைகள் மூலமாக கிடைத்த மாறுபட்ட தகவல்களின்படி முதலாவதாக இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை சம்பந்தமாகவும், அந்த எண்ணிக்கையினருக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு தேவைகள் சம்பந்தமாகவும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமையால் அப் பிரச்சினையை எவ்வாறு அணுக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களில் சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள், நலிவுற்றோர், அவயங்களை இழந்தோர் ஆகியோர் பற்றி அவர்களின் உறவினர்கள் பெரும் கவலை அடைகின்றனர். அவர்கள் படுகின்ற துன்பத்தால் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அவர்களுக்கு பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. இப்போதுதான் சர்வதேச சமூகம் பகிரங்கமாக விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி இடம்பெயர்ந்த மக்களை விடுவிக்காமைக்கு கண்டனமும் தெரிவிக்கின்றது. அதே நேரத்தில் சர்வதேச சமூகம், மனித உ?மை அமைப்புக்கள், ஐ.நா. ஸ்தாபனம் போன்றவை அவர்கள் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு கொண்டுவரப்படும் வரை ச?யான ?றையில் அம் மக்கள் கவனிக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. கடந்த 20, 25 ஆண்டு காலமாக விடுதலை புலிகளுக்கு உணவு அளித்து வந்த அரசு இம் மக்கள் விடுவிக்கப்படும் வரை தொடர்ந்து உதவ வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.
வடக்கே கடமையாற்றும் அரச அதிபர்கள் தரும் புள்ளி விபரங்கள் விடுதலைப் புலிகளின் வற்புறுத்தலால் தயாரிக்கப்பட்டவை என கூறி அவற்றை முற்றுமுழுதாக நிராகரிக்க முடியாது.
இதுவரை காலமும் அரச ஊழியர்களால் தயாரிக்கப்பட்ட இவ் அறிக்கைகள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை ஆகும். சனத்தொகை பற்றிய புள்ளி விபரம் விடுதலைப் புலிகளின் தலையீட்டால் மிகைப்படுத்தப்பட்டமை உண்மையே. ஆனால் அனேகமாக ஏனைய விபரங்கள் அத்தனையும் பெறுமதிமிக்கதும், உண்மையானதுமாகும். கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட அதிபர்கள் தத்தம் மாவட்டத் தில் முறையே 1,958,32 பேரும், 2,203,11 பேரும் மொத்தம் 4,161,43 பேர் 30122007 இல் வசித்து வந்தததாக கணக்கிட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் அழுத்தத்தால் இவ் எண்ணிக்கை இரண்டு மடங்காக காட்டப்பட்டதாக எடுத்துக் கொண்டாலும் கூட குறைந்த பட்சம் 2,008,71 பேர் அம்மாவட்டங்களில் இருந்திருக்க வேண்டும். வவுனியா, மன்னார் ஆகிய மாவட்ட மக்களைச் சேர்ந்த 2,856,74 பேர் இக் கணக்கில் உள்ளடக்கப்படவில்லை. வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 50,000 பேர் இடம் பெயர்ந்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் மொத்தமாக குறைந்தபட்சம் 2,580,00 மக்கள் இருந்திருக்க வேண்டும்.
இவற்றில் 55,000 மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் வந்து சேர்ந்துள்ளமையால் இத் தொகையை கழித்து மதிப்பிடின் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் குறைந்தபட்சம் 2,000,00 இற்கு மேற்பட்ட மக்கள் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தமது உறவினர்களுக்கு ஏது நடந்ததோ என அறிய முடியாது மிக்க கவலையும், பீதியும் கொண்டுள்ள உறவினர்களின் பயத்தையும், பீதியையும் போக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தற்போதைய நிலையில் சரியான உண்மை நிலையை அறியும் வரைக்கும் குறைந்தபட்சம் 2,50,000 மக்களுக்கேனும் அரசு தொடர்ந்து உணவும், மருந்து வகைகளும் அனுப்ப வேண்டியது தவிர வேறு வழியில்லை. ஆனால் என்னுடைய கணிப்பின்படி அங்கே 3,000,00 மக்கள் வரை இருக்கின்றார்கள் என்பதே. அரசு இதை தன் நற்பெயரை காப்பாற்றுவதற்கு மட்டுமன்றி இந்த நாட்டு பிரஜைகளுக்கு செய்ய வேண்டிய கடமையாக செய்ய வேண்டும்.
80,000 மக்களோ அன்றி 2,000,00 மக்களோ என்பதல்ல முக்கியம். மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்பதே உண்மையாகும். உள நோயால் பாதிக்கப்பட்டு பெரும் சித்திரவதைக் குள்ளாக்கப் பட்டுள்ள மக்கள் பிரேதங்களுடன படுத்து உறங்குவதும் தாம் அன்போடு நேசித்த உறவினர்களின் பிரேதங்களை எ?க்கவோ, அடக்கம் செய்யவோ, வசதியின்றி வீசி எறிவதும் சகஜமாகிவிட்டது.
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் துர்நாற்றமெடுக்கின்றன. இருப்பினும் தம் உறவினர்களில் ஒருவரையேனும் விட்டுவிட்டு வெளியேற அவர்கள் தயா?ல்லை. முழுக் குடும்பமாக வெளியேறுவதையே விரும்புகின்றனர்.
கொடிய விஷப் பாம்புகள், விஷ குளவிகள், நுளம்பு போன்ற ஜந்துக்களுடன் வாழ வேண்டிய நிர்ப்பந்தம். எந் நேர?ம் ஓர் கொடிய தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயம். எல்லாவற்றுக்கு மேலாக தினம் 24 மணித்தியாலமும் குண்டு விழுமோ, எத்திசையில் இருந்து ஷெல் அடியும், பீரங்கித் தாக்குதலும் ஏற்படுமோ என்ற நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள்.
இங்கே குறிப்பிட்டவை மக்கள் படும் துன்பங்களில் ஒரு சிறு பகுதியே வெளிகாட்டப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் 2500 ச.கி.மீற். விஸ்தீரணம் கொண்டவை.
அவர்களில் இரண்டு லட்சம் பேர் 25 ச.கி.மீற். விஸ்தீரணம் கொண்ட நிலப்பரப்பில் வாழ்வது மானிடர்களால் முடியாத காரியமாகும்.
நாட்டில் ஓர் பெரும் அனர்த்தம் ஏற்படுவதற்கு முன் அம் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
ஆகவே தயவு செய்து இந்த அப்பாவி மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்படும் வரை இராணுவத்தை முன்னேறிச்செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கவும். பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் ஊசலாடுகிறது. பல்லாயிரக்கணக்கான தோழர்களை தியாகம் செய்து இராணுவத்தினர் இவ்வளவு காலமும் எடுத்த நற்பெயரை ஒரு சிறு அசம்பாவித சம்பவத்தால் இழந்து விடக்கூடாது. 4,000 மக்கள் காயப்பட்டு திருமலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்றால் எத்தனை பேர் மரணித்திருப்பார்கள். என்பதை ஊகிக்க முடியும்? யாருடைய தவறினால் இவர்கள் மரணித்தார்கள் என்பதல்ல முக்கியம். அவர்களை காப்பாற்ற பல்வேறு வசதிகள் அரசுக்கு இருந்தும் அவ்வாறு அம் மக்களை இறக்கவிட வேண்டுமா என்பதே இன்று ஒவ்வொருவரும் எழுப்பும் கேள்வியாகும்.
நான் அரசியலில் லாபம் தேட முயற்சிக்கவில்லை. ஆனால் என்னுடைய கடமையை ஒரு தமிழன் என்றில்லாமல் இலங்கை பிரஜை என்ற கோதாவிலேயே இதை செய்கிறேன்.
நீங்களும் நானும் எமது கடமையில் இருந்து தவறி விட்டோம் என்று சர்வதேச சமூகம் குற்றம் சுமத்த இடமளிக்கக்கூடாது என்பதே எனது பெரு விருப்பமாகும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment