ஜனாதிபதி மஹிந்தவைச் சந்தித்த மேனன், நாராயணன்
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து இலங்கைக்குத் திடீர் விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பை வந்தடைந்த மேனன் மற்றும் நாராணயன் ஆகியோர் அலரிமாளிகையில் ஜனாதிபதி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
மிகவும் முக்கியமான விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், சந்திப்புக் குறித்து இரண்டு தரப்பும் எந்தவிதமான உத்தியோகபூர்வ அறிவித்தல்களையும் விடுக்கவில்லை.
எனினும், “தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கைகளால் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்கள் குறித்து எமது கவலையைத் தெரிவித்தோம்” எனப் புதுடில்லி திரும்பிய பின்னர் இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயனன் குறிப்பிட்டுள்ளார்.
“இரு தரப்புக்கும் இடையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியமானது” என இந்திய வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
0 விமர்சனங்கள்:
Post a Comment