31/2 சதுர கிலோமீற்றர் பரப்பளவே புலிகளுக்கு தற்போது எஞ்சியிருக்கிறது
முல்லைத்தீவில் இராணுவ நடவடிக்கைகளற்ற பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மக்களுடன் மக்களாகப் பதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்குத் தற்போது எஞ்சியிருப்பது குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் சார்ந்த சுமார் 31/2 சதுர கிலோமீற்றர் பரப்புடைய குறுகிய பிரதேசமே ஆகும். பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருக்கும் மக்களுக்கு ஏற்படக்கூடிய உயிர்ச்சேதங்களை தவிர்க்கும் முக்கிய குறிக்கோளுடனேயே இராணுவத்தினரின் தாக்குதல் நடவடிக்கைகளை அரசாங்கம் மட்டுப்படுத்தியுள்ளது.
இல்லாவிட்டால் பிரபாகரன் பதுங்கியிருக்கும் சுமார் 31/2 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பையும் அரச படையினர் கைப்பற்றுவதற்கு 31/2 மணித்தியாலம் போதுமானதாகும். ஆயினும், அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதி இராணுவத்தினர் அப்பகுதியை நோக்கி பெரிய அளவிலான தாக்குதல்கள் எதனையும் நடத்தாமலிருப்பதே பிரபாகரனும் அவருடைய உயர்மட்ட சகாக்களும் இன்னும் எஞ்சியிருப்பதாகக் கருதப்படும் 500 இற்கும் மிகக் குறைவான புலிகள் இயக்கத்தினரும் இதுவரையில் உயிரிழக்காமலோ அல்லது உயிருடன் பிடிக்கப்படாமலோ இருப்பதற்குக் காரணமாகும்.
இதனாலேயே புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு பிரதேசங்களுக்கிடையே உள்ள இந்தப் பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்தும் அண்டிய பகுதிகளிலிருந்தும் அரச படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குத் தப்பியோடாத வகையில் அவர்களைப் பலாத்காரமாக அங்கு தடுத்துவைத்துள்ளனர் புலிகள் இயக்கத்தினர். இவ்வாறு மக்களைப் பணயக்கைதிகள் போலவும், மனித கேடயங்களாகவும் புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்திருப்பதையும் தப்பிச்செல்ல முயற்சிக்கும் மக்கள் மீதும் படகுகள் மீதும் சூட்டுத் தாக்குதல் நடத்துவதையும் சர்வதேச சமூகம் தற்போது நன்கு அறிந்துள்ளது. இதனாலேயே, பொதுமக்களை யுத்தப் பிரதேசத்திலிருந்து வெளியேறாமல் பலாத்காரமாகத் தடுத்துவைத்திருப்பதைக் கண்டித்தும் அவர்களை வெளியேறவிடும்படி கோரியும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட அனைத்து நாடுகளும் புலிகள் இயக்கத்துக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் பொதுமக்களை விடுவிக்கக்கோரிப் புலிகள் இயக்கத் தலைவருக்கு சர்வதேசம் கொடுக்கும் அழுத்தத்தைக் காட்டிலும் பிரபாகரனையும் உயர்மட்டத் தலைவர்களையும் காப்பாற்றும் உள்நோக்கத்துடன் யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசுக்கு சர்வதேசம் கொடுக்கும் அழுத்தமே மிக அதிகமாகும். இந்த உள்நோக்கத்தைச் எவ்வாரேனும் நிறைவேற்றுவதற்காகவே யுத்த பிரதேசத்தில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றுதல், நிவாரண நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறுதல் என்ற காரணங்களை முன்வைத்து பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் முன்னணி மேற்கத்தேய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் சபை சார்ந்த அமைப்புகளும் அடிக்கடி ஸ்ரீலங்காவுக்கு அவற்றின் பிரதிநிதிகளையும் அமைச்சர்களையும் அனுப்பி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. இவ்வாறாக புலிகள் இயக்கத் தலைவர்களைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே யுத்தநிறுத்தம்கோரி அண்மையில் பிரிட்டிஷ் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்தனர். ஆயினும், மேற்கு நாடுகளின் உள்நோக்கம் அறிந்துள்ள ஜனாதிபதி அவர்களின் கோரிக்கைக்கு இணங்காததால் மேற்படி அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திருப்பினர். இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஸ்ரீலங்கா உறவுகள் விரிசலடைந்து வருவதாகச் சில புலிகள் ஆதரவு ஊடகங்களும் நிலையைப் பெரிதுபடுத்திவருகின்றன.
எவ்வாறாயினும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் தலைவர்களையும் புலிகள் இயக்கத்தினரையும் யுத்தம் மூலம் முற்றாக ஒழித்துக் கட்டுவது என்ற நிலைப்பாட்டிலிருந்து ஜனாதிபதி சிறிதேனும் அசைந்துவிடவில்லை. பிரபாகரனும் புலிகள் இயக்கத்தினரும் கொல்லப்படுவார்கள் என ஜனாதிபதி பகிரங்கமாகவும் உறுதியாகவும் தெரிவித்துவிட்டதிலிருந்து ஜனாதிபதியின் யுத்தநிலைப்பாட்டின் உறுதி தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இதனாலேயே தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயமும் அண்டிய பிரதேசங்களும் அடங்கியதாக தற்போது புலிகள் இயக்கத்தினர் மக்களுக்கிடையே பதுங்கியிருந்து தாக்குதல்களை நடத்திவரும் சுமார் 31/2 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தையும் மட்டுப்படுத்தப்பட்ட யுத்த நடவடிக்கைகள் மூலமே, பிடிப்பதற்கு அரச படையினர் முயன்று வருகின்றனர். இதன் மூலம் நாளுக்கு நாள் இராணுவத்தினர் பிரபாகரனும் பொட்டு அம்மான், சூசை, சொர்ணம் போன்ற உயர்மட்டத் தலைவர்களும் மறைந்திருக்கும் பதுங்குகுழி நிலையங்கள் நோக்கி சிறிது சிறிதாக முன்னேறிவருகின்றனர். எவ்வாறாயினும் நேரடியான தீவிர கனரக ஆயுதத் தாக்குதல்கள் மூலம் சுமார் மூன்று மணித்தியாலங்களில் கைப்பற்றக்கூடிய அந்தக் குறுகிய பிரதேசங்களையும் பிரபாகரனின் பதுங்குகுழி நிலையங்களையும் தற்போது மேற்கொண்டுவரும் கனரக ஆயுதப் பயன்பாடுகளற்ற மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றுவதற்கும் பிரபாகரனையும் தலைவர்களையும் கொல்வதற்கோ அல்லது உயிருடன் பிடிப்பதற்கோ சுமார் ஒரு மாதகாலம் எடுக்கக்கூடும் என பாதுகாப்பு விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தினர் அவர்களின் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் கடந்த 4 ஆம் திகதி மேற்படி பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பிரதேசம் சார்ந்த ஒன்றரை சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ளனர். இதனால், தற்போது பிரபாகரன் மக்களிடையே பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திவரும் அவருக்கு இன்னும் எஞ்சியிருப்பதுமான பிரதேசம் மூன்றரை சதுர கிலோமீற்றராகக் குறைந்துள்ளது. இராணுவ மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் சொல்வதானால் பிரபாகரனும் தலைவர்களும் எஞ்சியிருக்கும் நூற்றுக்கணக்கான புலிகள் இயக்கத்தினரும் தற்போது மூன்றரை சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் அரச படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர் எனலாம் என போர்க்கள முன்னணியைச் சேர்ந்த சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் பத்திரிகைக்கு உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
மூன்றரைச் சதுர கிலோமீற்றர் பரப்புடைய பிரதேசம் எனப்படும் போது அப்பிரதேசம் சதுர வடிவிலோ, வட்ட வடிவிலோ வேறு எந்த வடிவத்திலோ இருந்தாலும் அதன் விட்டம் அல்லது நீளம் சுமார் ஒரு கிலோ மீற்றராகவே இருக்கும். எனவே, தற்போது இராணுவத்தினர் பிரபாகரன் பதுங்கியிருக்கும் பதுங்குகுழியிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளனர் என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். இவ்வாறு பிரபாகரனினதும் தலைவர்களினதும் பதுங்குகுழி நிலையமும் பகுதியும் குறிப்பாக வெள்ளமுல்ல வாய்க்கால் பிரதேசத்திலேயே உள்ளன. இப்பகுதி தற்போதுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தினூடாக வடக்கே அமைந்துள்ளது. தற்போது இந்த வெள்ளமுல்ல வாய்க்கால் பகுதியை நோக்கி 5 ஆம் மற்றும் 53 ஆம், 58 ஆம் இராணுவ படையணிகள் மேற்படி பாதுகாப்பு வலயத்தின் வடக்கே பிரதான வீதி, நந்திக் கடல் ஏரிக்கு வடக்குப் பிரதேசம் ஆகிய பிரதேசங்கள் ஊடாக முன்னேறி வெல்லமுல்ல வாய்க்கால் பகுதியில் பதுங்கியிருக்கும் பிரபாகரனைச் சுற்றிவளைத்துள்ளன. அவ்வாறே முல்லைத்தீவு கடலோரப் பிரதேசத்தில் நிலை கொண்டிருக்கும் 59 ஆம் இராணுவப் படையணியினரும் குறித்த வெல்லவாய்க்கால் பகுதியை நோக்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வெல்லமுல்ல வாய்க்கால் பகுதியில் பதுங்குகுழி நிலையங்களிலுள்ள பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை, சொர்ணம் போன்ற தலைவர்களையும் அவர்களுக்குப் பாதுகாப்பாக சுற்றியிருக்கும் புலிகள் இயக்கத்தினரையும் 53 ஆம், 58 ஆம் மற்றும் 59 ஆம் அரச இராணுவப் படையணிகள் மூன்று பக்கத்திலும் சுற்றிவளைத்து பிரபாகரனை தலைவர்களோ புலிகள் இயக்கப் படையினரோ வெளியேறாத முறையில் நிலைகொண்டுள்ளன. மற்ற ஒரு பக்கம் பொதுமக்கள் பாதுகாப்பு வலயப்பகுதி என்றாலும் அந்த வலயப் பிரதேசத்தைச் சுற்றியும் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் தற்போது புலிகள் இயக்கத் தலைவர்கள் அவர்கள் பதுங்கியிருக்கும் வெள்ளமுல்ல வாய்க்கால் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பு வலயப் பிரதேசத்துக்குள்ளும் இலகுவாகச் செல்ல முடியாது.
குறித்த வெள்ளமுல்ல வாய்க்கால் பிரதேசத்தில் பிரபாகரனும் தலைவர்களும் பதுங்கியிருக்கும் பிரதேசம் கடந்த 4 ஆம் திகதி இராணுவத் தரப்பால் கைப்பற்றப்பட்ட ஒன்றரை சதுர கிலோமீற்றர் பரப்பைவிட 31/2 சதுர கிலோமீற்றர் நிலப்பிரதேசம் மட்டுமே ஆகும். அப்பகுதியில் எந்தவொரு நிலையத்திலிருந்தும் தற்போது இராணுவத்தினர் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலேயே நிலைகொண்டுள்ளனர். எனவே, தான் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் எங்கோ ஒரு பதுங்குகுழி நிலையத்தில் மறைந்திருக்கும் பிரபாகரன் அங்கிருந்து தப்பிச்செல்லும் சாத்தியம் எதுவுமில்லை. அவர் இராணுவத்தினருடன் நேரடியாக மோதுவதற்கு வெளியே வரவேண்டும். அல்லது சயனைற் உட்கொண்டு தற்கொலை செய்ய வேண்டும். சுற்றிவளைத்திருக்கும் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினருடன் இறுதித் தாக்குதலுக்காக பிரபாகரனும் பொட்டு அம்மானும் மற்றும் தலைவர்கள் இயக்கத்தினரும் முன்வரும் பட்சத்தில் அவர்கள் ஒரு சில மணிநேரத்துக்குள் கொல்லப்படுவார்கள் அல்லது உயிருடன் பிடிக்கப்படுவார்கள். தற்போது அனைத்துப் பாதுகாப்பு விமர்சகத் தரப்பிலும் தெரிவிக்கப்படும் கருத்துகள் இவைகளே ஆகும்.
திவயின செய்தியும் விமர்சனமும் : 05.05.2009






0 விமர்சனங்கள்:
Post a Comment