லண்டன் "சனல்4" தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் மூவர் திருமலையில் கைது!
லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கும் பிரபல "சனல் 4" தொலைக் காட்சியின் ஊடகவியலாளர்கள் மூன்று பேர் திருமலையில் வைத்து நேற்றுக் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கைது செய்யப்பட் டுள்ளதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகராவும் உறுத்திப்படுத்தி னார். இவர்கள் மூவரும் திருமலையிலிருந்து கொழும் புக்குபலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டனர்.இடம்பெயர்ந்து வருபவர்கள் மீதான படையினரின் கெடுபிடிகள் குறித்தும் நலன்புரி நிலையங்களில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது குறித்தும் அண்மையில் "சனல் 4" வெளியான செய்தியறிக்கை தொடர்பிலேயே தாங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று "சனல் 4" தொலைக்காட்சியின் ஆசிய பிராந்திய செய்தியாளர் நிக் பற்றன் வால்ஷ் ஏ.பி. செய்தியாளரிடம்தெரிவித்தார்.
நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பெஸ்ஸி டியூ மற்றும் கமெரா இயக்குநர் மற் ஜஸ்பெர் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள்மூவரும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களை நேரடியாகப் படம்பிடித்து வெளியிட்டிருந்தனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment