புலித் தற்கொலைத்தாரி 7வது மாடியில் இருந்து குதித்து மரணம்
வெள்ளவத்தை 37வது லேனில் உள்ள ஒர் அடுக்குமாடி குடியிருப்பை நேற்று ( மே. 14) மாலை படையினர் தேடுதல் நடத்தியபோது 7வது மாடியில் இருந்து புலித் தற்கொலைத்தாரி ஒருவர் கீழே குதித்து தன்னைதானே மாய்த்துக் கொண்டுள்ளார்.
படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலை அடுத்து வெள்ளவத்தை காவல்துறையுடன் இணைத்து குறிப்பிட்ட குடியிருப்பை சோதனையிடச் சென்றபோது தமோதரபிள்ளை சசிதரன், 23, என்ற இளைஞர் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
அவரது வசிப்பிடத்தை சோதனையிட்ட பொலிஸார் 4 தற்கொலை அங்கிகளைக் கண்டெடுத்துள்ளனர். தற்கொலைதாரியின் சடலம் மேலதிக விசாரணைக்காக களுபொவில்ல அரச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment