வருமா பிரபாகரன் வாய்ஸ்...
நான்கு மாதங்களுக்குமுன்பு வரை தமிழகத்தின் தார் மீக ஆதரவுக் குரலை எதிர் பார்த்துக் காத்திருந்தனர் விடுதலைப்புலிகள். இப்போதோ... 'விடுதலைப் புலி களின் ஆதரவு கூட வேண்டாம்; எதிர்ப் பாவது எழாமல் இருக்க வேண்டுமே' என கலங்கிக் கொண்டிருக்கின்றன, தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள்!
அந்த அளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ஈழ விவகாரத்தை உருமாற்றிக் கொண் டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.
'தனி ஈழம் அமைத்தே தீருவேன்!' என பொட்டில் அடித்தாற்போல் ஜெயலலிதா செய்யும் பிரசாரம், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ரொம்பவே குடைச்சலில் ஆழ்த்தி இருக்கிறது. இது நாள் வரை 'ஈழத் தமிழர்களின் அமைதிக்கு வழி செய்வோம்' எனப் பட்டும்படாமல் சொல்லிக் கொண்டிருந்த முதல்வர் கருணாநிதி, மருத்துவமனையில் இருந்தபடியே 'தனி ஈழத்தைப் பெற்றுத் தரவும் முயற்சிகளை எடுப் போம்!' எனச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்.
இந்த அரசியலின் உச்சகட்டமாக, ஈழ எழுச்சியைத் தன் பக்கம் பெரி தாகத் திருப்பும் வண்ணம் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் குரலை வாங்குகிற முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்கள்.
அவர்களிடம் பேசியபோது... ''காங்கிரஸுடனான உறவைப் பெரிதாக நினைத்து, ஆரம்பத்தில் ஈழ விவகாரத்தை அலட்சியப்படுத்தினார் கருணாநிதி. ஆனால், தமிழகத்தில் போராட்டம், தீக்குளிப்பு என பெரிய அளவிலான ஈழ எழுச்சி
பொங்க... அப்போதும் தந்தி அடித்தும் தபால் அனுப்பியும் மத்திய அரசுக்கு 'சும்மானாச்சுக்கும்' கோரிக்கைகள்தான் வைத்தார். கடைசியாக உண்ணாவிரதமும் உட்கார்ந்து பார்த்தார். போர்நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டதாக சில மணி நேரங்களிலேயே அதை முடித்துக்கொள்ள... தமிழக மக்கள் குழம்பினர்.
ஆனால்... கருணாநிதியின் பேச்சு பொய் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இன்று வரை ஈழத்தில் போர்! தொடர்ந்து பலியாகும் தமிழ் உயிர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கிடையில் ஈழ விவகாரத்தை திசைதிருப்பும் வகையில் கடைசிக் கட்டத்தில் தி.மு.க. தரப்பு, வீணான பரபரப்புகளைக் கிளப்பி விடும் வேலையில் இறங்கி இருக்கிறது.
கருணாநிதியின் உடல்நலம் குறித்த சர்ச்சைகளை போலீஸ் தரப்பே கிளப்பி விடுவதாகத் தெரியவந்திருக்கிறது. இதற்கெல்லாம் தக்க முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் விடுதலைப் புலிகள் தரப்புடன் எங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...'' என்றவர்கள், லேசான செருமலுடன் தொடர்ந்தனர்.
''தமிழகத்தில் எப்போதுமே முக்கியமான ஆட்களின் வாய்ஸ்தான் தேர்தல் திருப்பு முனையாக அமையும். அந்த வகையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் வாய்ஸை இந்தத் தேர்தலில் உலகத் தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்!' என முழங்கும் ஜெயலலிதாவின் பேச்சுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. திரைத் துறையினரும் 'தனி ஈழத்தை அமைக்க உறுதி பூண்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களியுங்கள்' என காங்கிரஸ§க்கு எதிராகப் பிரசாரம் செய்துவருகின்றனர்.
அதனால் பிரபாகரனின் ஆதரவு வாய்ஸ் எங்கள் கூட்டணிக்குக் கிடைத்தால் எங்களுக்கு கூடுதல் பலமாக இருக்கும்!'' என நம்பிக்கையோடு சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் விஷயப்புள்ளிகள்.
ஈழ உணர்வாளர்கள் வட்டாரத்தில் இது பற்றிக் கேட்டபோது...
''கருணாநிதி போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவித்த தகவலை புலிகளின் தரப்பு மறுத்தது. கருணாநிதிக்கு எதிராக ஒரு போதும் அறிவிப்பு வெளியிடாத புலிகள் அமைப்பினர், 'கருணாநிதியின் அறிவிப்பை ஏற்று சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யவில்லை!' என நடேசன் மூலமாக முதன் முறையாக அறிவித்தார்கள். முப்பது வருடப் போராட்டத்தில் சந்தித்திராத இக்கட்டுகளுக்கும் நெருக்கடிகளுக்கும் புலிகள் இப்போது ஆளாகி இருக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைத்தான் புலிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதனால், ஈழ ஆதரவு வாக்குகள் சிதறி விடாதபடி தமிழக மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் விதமாக அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரபாகரன் வாய்ஸ் கொடுக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறோம். பிரபாகரனின் ஆதரவுக் குரல் கிடைத்து விட்டால், நாற்பது தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெல்வது மேலும் உறுதிப்படும்!'' என்றனர்.
உளவுத் துறை மூலமாக தி.மு.க. தரப்புக்கும் பிரபாகரனின் வாய்ஸ் குறித்த செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
தி.மு.க. தரப்பு என்ன நினைக்கிறது?
''பிரபாகரன் யாரையும் ஆதரித்து வாய்ஸ் கொடுக்க மாட்டார். பிரபா கரனின் பேச்சைப் பதிவு செய்து, அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுக்க ஒலிக்க வைக்கும் திட்டம் கூட சில தினங்களுக்கு முன்பு நடந்தது. ஆனால், புலிகள் அதற்கு உடன்படவில்லை. காரணம், ஜெயலலிதாவை புலிகள் நம்பவில்லை. ஈழம்... ஈழம் என வாய்கிழியப் பேசும் ஜெயலலிதா புலிகளுக்கு ஆதரவாக இதுவரை வாய் திறந்தாரா? 'என் தந்தையைக் கொன்ற புலிகளை மன்னிக்கவே மாட்டேன்.
இலங்கை விஷயத்தில் இந்தியா இனி செய்வதற்கு ஒன்றுமில்லை!' எனச் சொல்லி வந்த ராகுல்காந்தி, சமீபத்தில் அ.தி.மு.க. உறவைப் பற்றியும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது குறித்து ஜெயலலிதா மழுப்பலான பதிலையே சொல்லி இருக்கிறார்.இதையெல்லாம் புலிகள் கண்டிப்பாககவனித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் அவ்வளவு சீக்கிரம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரபாகரன் வாய்ஸ் கொடுக்க வாய்ப்பே இல்லை!'' என உறுதிபடச் சொல்கிறார்கள் தி.மு.க. முக்கியப் புள்ளிகள்.
''பிரபாகரன் வாய்ஸ் கிடைக்கா விட்டாலும், நடேசன் பேசினால் கூட போதும்... என்று எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து புலிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதற்கு வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது...'' என்கிறார்கள் உளவுத் துறை அதிகாரிகள் சிலர்.
நன்றி:விகடன்






0 விமர்சனங்கள்:
Post a Comment