பிரபாகரனது உடல் மரபணு மற்றும் நீதிமன்ற பரிசோதனைகளுக்குச் செல்கின்றது.
படையினரது முற்றுகை ஒன்றை உடைத்துக்கொண்டு வெளியேற முற்பட்ட பிரபாகரன் மற்றும் அவரது இரு முக்கிய தளபதிகள் நேற்று அதிகாலை படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். அவர் பயணித்த இரும்பு கவசமிடப்பட்ட வாகனம் ஆர்பிஜி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால் அவ்வாகனம் வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.
அவ்வாகனத்தில் இருந்தவர்களதும் பிரபாகரனதும் சடலங்கள் கருகியுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவ இடத்தில் கண்டெடுத்த பிரபாகரனது உடல் என சந்தேகிக்கப்படும் உடலங்களுடன் மேலும் 40 புலிப்போராளிகளின் உடலங்கள் அனுராதபுரத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அச்சடலங்கள் மரபணு மற்றும் நீதிமன்ற பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அனுராதபுர மஜிஸ்ரேட் சாமரி தனன்சூரிய மரபணு மற்றும் நீதிமன்ற பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். பிரேதபரிசோதனை அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெறும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






0 விமர்சனங்கள்:
Post a Comment