வயாக்ராவை கண்டுபிடித்தவர் மரணம்
ஆண்மையை அதிகரிக்க செய்யும் வயாக்ரா மாத்திரையை கண்டுபிடித்த விஞ்ஞானி ராபர்ட் பர்ச்காட்(92) காலமானார். ஒரு காலத்தில் செயற்கை மழையை பொழிய செய்வதற்காக நைட்ரிக் ஆக்சைடை விமானத்தில் எடுத்துச் சென்று மேகத்தில் தெளிக்க செய்வர். இதன் மூலம் மேகத்தில் ஈரப்பதம் கூடி மழை பெய்யும்.
ஆனால், நைட்ரிக் ஆக்சைடு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்பதால், செயற்கை மழைக்கு இந்த ரசாயனத்தை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் நைட்ரிக் ஆக்சைடு இதய செயல்பாட்டுக்கு பெரிதும் துணை புரிவதாக பர்ச்காட்டும் அவரது நண்பர்களும் கண்டறிந்தனர். ரத்த குழாய்களில் அழுத்தத்தை சீரமைத்து ரத்த ஓட்டத்தை எளிதாக்க நைட்ரிக் ஆக்சைடு உதவுகிறது என்பதை கண்டுபிடித்தனர். இதற்காக, ராபர்ட் பர்ச்காட்டுக்கு, 1998ம் ஆண்டு நோபல்பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது ஆண்களின் மன ஏக்கத்தை போக்கும் வகையில், வயாக்ரா மாத்திரையை கண்டுபிடித்து உலக புகழ் பெற்றார். இதனால், பெரும்பாலான ஆண்களின் இல்வாழ்க்கையில் ஒளிஏற்றியவர் என்ற பெருமை பெற்றார். இதற்கிடையே வயோதிகத்தின் காரணமாக சமீபகாலமாக உடல் நலிவுற்று காணப்பட்ட பர்ச்காட், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நேற்று முன்தினம் காலமானார். பர்ச்காட்டின் மரணத்தை அவரது மகள் உறுதிப்படுத்தியுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment