சிறிலங்காவுக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோல்வி!
சிறிலங்காவுககு எதிராக இஸ்ரேல், உலக சுகாதார ஸ்தாபன அமர்வில் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துளைப்புடன் முறியடிக்கப்பட்டது என சிறி லங்கா சகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் சிறி லங்கா சார்பாக கலந்து கொண்டார். அந்த அமர்வின்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக்கருதி சிறி லங்காவுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக்குழுவொன்றை சிறி லங்காவுக்கு அனுப்பவேணடும் என இந்த அமர்வின்போது இஸ்ரேல் யோசனையொன்றை முன்வைத்தது. ஆனால் சக நாடுகளின் உதவியுடன் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது என அமைச்சர் நிமால் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சிறி லங்காவைச் சேர்ந்த எவரும் இந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டது கிடையாது. உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவிக்கு தமது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதை அறிந்தது முதல் ஜெனிவா உலக சகாதார ஸ்தாபனத்திற்கு முன்பாகவும், ஐக்கிய நாடுகள் சபை முன்பாகவும் பெருமளவு தமிழர்கள் தமக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment