விடுதலைப்புலிகள் தோற்றது ஏன்?
வியட்நாம் விடுதலைக்காகப் போராடிய வியட்நாம் போராளிகளிடமோ, அயர்லாந்து விடுதலைக்காகப் போராடிய அயர்லாந்து விடுதலைப் போராளிகளிடமோ, பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிய பாலஸ்தீன விடுதலைப் போராளிகளிடமோ இல்லாத அளவுக்கு ஆயுத வலிமை விடுதலைப் புலிகளிடம் இருந்தது.
வான்படை, கடற்படை, தற்கொலைப்படை (கரும்புலிகள்) என்று இவ்வளவு படைபலம் இருந்தும், விடுலைப்புலிகள் தோற்றிருக்கின்றனர்.
இந்த அதிர்ச்சித் தோல்லிக்கு என்ன காரணம்?
விடுதலைப் புலிகள் எப்போதுமே, ஒரு விஷயத்தை அறிவுப+ர்வமாக அணுகாமல், உணர்ச்சிப்ப+ர்வமாகவே அணுகினர்.
எதிரியென்று ஒரு நபரை முடிவு செய்து விட்டால், அடுத்த கணமே, அந்த எதிரியை அழித்தொழிக்கும் பணியில் இறங்கினர்.
சிறி சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், ராஜிவ் என்று, அவர்களின் எதிரிப் பட்டியல் நீண்டுகொண்டே போனது.
ராஜிவைப் படுகொலை செய்ததன் மூலம், ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பிழையைச் செய்தனர். ஆபத்து காலத்தில், ஓடி ஒளிவதற்கு கூட ஒரு இடம் இல்லாமல் போனது.
இறுதிக் காலத்தில் இந்தியா உதவ வேண்டும் என்று அபயக்குரல் எழுப்பியவர்களுக்கு, இந்த யுக்தி முன்பே இருந்திருந்தால் ராஜிவ் கொல்லப்பட்டிருக்க மாட்டார்.
உலகில் எந்தப் போராளி இயக்கத்திடமும் வான்படை கிடையாது. அதை உருவாக்கும் வல்லமையும் கிடையாது. ஆனால், விடுதலைப்புலிகளிடம் அது இருந்தது.
அந்த வான்படையை வலுவாக்கி, சரியான தருணத்தில் அதைப் பயன்படுத்தாமல், திருவிழாவில் கிலுகிலுப்பையை வாங்கிய குழந்தை, தெருவெல்லாம் அதைக்காட்டி மகிழ்வதைப் போல, அவசர கோலத்தில் கொழும்பிற்கு சென்று, இருமுறை குண்டு போட்டு, தங்களுடைய வான்படை பலத்தைக் காட்டி மகிழ்ந்தனர். அதுவே அவர்களுக்கு வினையாகிப் போனது.
ராஜிவ் - ஜெயவர்தன உடன்பாட்டில், சில பாதகமான அம்சங்கள் இருந்தாலும், அதை பிரபாகரன் ஏற்று, படிப்படியாக அதை சரிசெய்ய முயற்சித்திருக்கலாம்.
இஸ்ரேலோடு சதா சண்டை போட்டுக்கொண்டிருந்த யாசர் அராபத், ஒரு தற்காலிக சமரச உடன்பாட்டுக்கு இணங்கினார். ஹமாஸ் இயக்கம் அதை கடுமையாக எதிர்த்தது. அதற்கு யாசிர் அராபத் சொன்ன ஒரே பதில், நான் நிற்பதற்கு ஒரு நிழல் வேண்டும்!.
யாசர் அராபத் நின்ற அதே நிழலில் தான், அன்று அதை கடுமையாக எதிர்த்த ஹமாஸ் இயக்கம், இன்று நின்றுகொண்டிருக்கிறது. இது தான் உலக யதார்த்தம்.
யாசர் அராபத்துக்குப் புரிந்த உலக யதார்த்தம் பிரபாகரனுக்குப் புரியாமல் போனதற்கு, அரசியல் முதிர்ச்சி இன்மையும், ஆர்வக் கோளாறுமே காரணம். அதனால் தான் இவ்வளவு பெரிய தோல்வி.
இ. துரைசாமி - சென்னை
(தொகுப்பு: அலாதி அன்பு)
நன்றி : தினமலர் 27.05.2009
0 விமர்சனங்கள்:
Post a Comment