புலி உறுப்பினர்களில் ஆறாயிரம் பேர் இதுவரையில் படையினரிடம் சரண்..!!
வன்னியிலிருந்து தப்பி வந்த புலி உறுப்பினர்களில் ஆறாயிரம் பேர் இதுவரையில் படையினரிடம் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை யாழ். குடாநாட்டில் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ். இராணுவத் தளபதி கேட்டுள்ளார். புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளை கொடுத்து உதவுவது சட்டரீதியான மாபெரும் தவறு என்றும் தலைமறைவாக உள்ள புலி உறுப்பினர்களை படையினரிடம் சரணடைய செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் யாழ். இராணுவத் தளபதி பொதுமக்களைக் கேட்டுள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment