தமிழ் மக்களின் இன்றைய அவலத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரதான காரணம்
கேள்வி: தமிழ் மக்களின் ஏக பிரதிகள் தாங்களே எனக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தாமல் அனைத்துக்கும் இந்திய தரப்புத் தலைமைகளுடன் பேசுவது ஏன்?
பதில்: யார் சொன்னது? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்களே தவிர, இவர்கள்தான் எமது தலைவர்கள் என்று தமிழ் மக்கள் கூறவில்லையே?
கேள்வி: இல்லை..இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தானே பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பதில்: கடந்த பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்களின் ஏக பிரதிகள் எனத் தம்மைக் கூறிக் கொண்ட இவர்கள், எவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டினார்கள் என்பது பகிரங்கமான விடயம். வடக்கு, கிழக்கில் ஏனைய கட்சிகள் போட்டியிடுவதனைத் தடுத்து, அச்சுறுத்தி, ஏனைய கட்சிகளின் ஜனநாயக அரசியலுக்கு இடம் கொடுக்காமல் கள்ளத்தனமான வாக்குகளின் மூலமே இவர்கள் பாராளுமன்றக் கதிரைகளைக் கைப்பற்றினர்.
கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமே ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சிலர் 25க்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்திருந்தனர். இவ்வாறானதொரு நிலையில் இது எந்த வகையில் உண்மையான வெற்றியாகும்.
கேள்வி: அப்படியாயின் இந்த ஊழல் மோசடிக்கு எதிராக நீங்கள் சட்ட நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமே?
பதில்: அந்தச் சந்தர்ப்பத்தில் நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்கள் அனைவரையும் பாராளுமன்றத்துக்கு வராமல் தடுத்திருப்பேன்.
கேள்வி: இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களக்கு வந்த மக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இருப்பினும் இது தொடர்பாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இராணுவத்தினரே தமிழ் மக்கள் மீது தாக்தல் நடத்தியதாக கூறினரே?
பதில்: இந்த விடயத்தில் நான் எந்தத் தரப்பையும் உத்தமத் தன்மையுடன் பார்க்கவில்லை. ஆனால் தமிழ் மக்களின் அண்மைக் கால அவலத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முக்கிய காரணம் என்பதனை இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.
அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்த போது அவர் சில படங்களை என்னிடம் காடடினாhர். அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் தொடர்பான படங்களே. சில பச்சிளம் குழந்தைகளின் படங்களை அவர் எமக்குக் காண்;பித்தார். அங்குள்ள சிறுவர்கள் வால் பேத்தைகள் போன்று காணப்பட்டனர். அந்தப் படங்களைப் பார்க்கும் எவரும் கண்ணீர் விடுவர். இவ்வாறான அக்கிரமத்தைச் சரி என்று வாதாடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தன்னை அரசியல் கட்சி எள்றோ, மக்கள் பிரதிநிதி என்றோ கூறத் தகுதியற்றது.
கேள்வி: புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுக்குத் தேவையான அனைத்தையும் இலங்கை அரசாங்கம் வழங்கிக் கொண்டுதானே இருந்தது?
பதில்: இராணுவக் கட்டுப்பாட்டில இல்;லாதிருந்த பிரதேசங்களுக்கும் இலங்கை அரசாங்கமே அனைத்தையும் வழங்கி வந்தது. அதனை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அந்தப் பிரதேசங்களுக்கு அரசினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களையும் புலிகளே கையாண்டனர்.கைப்பற்றினர். புதிதாக அனுப்பப்படும் பொருட்களையெல்லாம் அவர்கள் எடுத்துக் கொண்டு காலாவதியான,பழையனவற்றையே மக்களுக்குக் கொடுத்து வந்தனர். அத்துடன் சரியான ஒழுங்கில் பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் அவர்கள் அசிரத்தை; காட்டி வந்தனர். அந்த மக்களைப் பட்டினிப் போட்டுச் சாகடித்தே வந்துள்ளனர்.
கேள்வி: இதனை உங்களால் எவ்வாறு ஒப்புவிக்க முடியும்?
பதில்: தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்தில் மரணமடைந்த ஏழு பேரின் பிரேத பரிசோதனையின் போது அவர்களின் வயிற்றினுள் எதுவுமே இல்லாத நிலை காணப்பட்டது. அவர்கள் அனைவரும் பட்டினி காரணமாகவே இறந்தனர்;. இது போன்று இன்னும் எத்தனையோ பேர் பட்டினியால் மடிந்திருப்பர். புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்த ஒருவர் தெரிவித்த தகவலின் படி இலங்கை அரசாங்கமும் இந்தியாவும் அனுப்பி வைத்த அனைத்துப் பொருட்களும் புலிகளின் கட்டுப்பாட்;;டிலிருந்த பிரதேசங்களில் பொதுமக்களுக்கு விநியோககிக்கப்படாத நிலையில் வீணாக அங்கும் இங்குமாகக் கொட்டப்பட்டுக் காணப்பட்டிருந்ததாகவும். சிறுவர்களுக்கான பால் மா கூட இவற்றில் அடங்கும் எனவும்; தெரிவித்திருந்தார்.
கேள்வி: இறுதியாக இடம்பெற்று முடிந்த யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் தரப்பில் எத்தனை பேர் கொல்லபட்டிருக்கலாமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: நாலாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
கேள்வி: தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு மாறான செயற்பாட்டைக் கொண்டவர் நீங்கள் என்றும் அரசாங்கத்தின் பிரசாரகராகவே நீங்கள் செயற்படுகிறீர்களென்றும் உங்கள் மீது எழுந்துள்ள குற்றச் சாட்டுகள் தொடர்பில்..
பதில்: அப்படி யாராவது சொல்வார்களானால் அவர்கள் நிச்சயம் புலிகளாகவோ புலிகளுக்கு ஆதரவானவர்களாகளவோ இருப்பார்கள். என் மீது வெறுப்புக் கொண்டவர்களுமே இவ்வாறு கூறுவர். தமிழ் மக்களின் பிரச்சினைக்குச் சமஷ்டி முறையிலான தீர்வே தேவையென அன்றிலிருந்து இன்று வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பவன் நான். இது சர்வதேசம் அறிந்த விடயம்.ஆனால் சமஷ்டி என்ற இந்தச் சொல் சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் ஒரு ஒவ்வாமைத்தன்மையைக் கொண்டதாவிருப்பதால் அந்தச் சொல்லுக்குப் பதிலாக இந்திய முறையிலான தீர்வு என நான் கூறி வந்தவன். இந்தியா மாதிரி முறையிலான ஒரு தீர்வுத் திட்டமே தமிழ் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குமென உள்ளுர் மற்றும் வெளியூர் தலைவர்களுக்கும் மற்றும் மதத் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களுக்குக் கூறி வரும் என்னை அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு. ஒரு காலமும் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யவுமில்லை. எதிர்காலத்தில் தமிழ் துரோகியாக மாறப் போதுமில்லை.
கேள்வி: பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் அழிக்கப்பட்டு விட்டது. இத்தோடு தமிழ் மக்கள் பிரச்சினையும் தீர்ந்து விட்டதுதானே?..
பதில்: இல்லை..இல்லை.. அது பிழையானது. இந்த நாட்டில் வாழும் அனைத்துச் சமூகங்களும் மனத்திருப்தியோடு வாழக் கூடிய நிலை என்று ஏற்படுகிறதோ அன்றுதான் பிரச்சினைகள் தீர்ந்ததாகக் கருத முடியும்.
கேள்வி: பிரபாகரன் போன்றவர்கள் தோன்றக் காரணமாக இருந்தது தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசுகளின் அடக்கு முறையே என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஏன் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை?
பதில்: எங்களது அஹிம்சைப் போராட்டம் முடிந்து விட்டது. எங்களால் இனி அஹிம்சை வழியில் போராட முடியாது நீங்கள் ஆயுதங்களைத் தூக்கிப் போராடுங்கள் என்று யாருக்கும் நாங்கள் கூறவில்லையே? மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவழி மக்கள் தமது பிரஜா உரிமைக்காக ஆயுதம் ஏந்தியா போராடினார்கள்? அவர்களுக்குப் பிரஜா உரிமை கிடைக்கவில்லையா?
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமானது ஆரம்பத்தில் சரியான பாதையில் சென்றிருந்தாலும் அது பிந்திய காலத்தில் பயங்கரவாத இயக்கமாக மாறிவிட்டது என்ற கருத்துத் தொடர்பில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்: விடுதலைப் புலிகளின் போராட்டமானது அரசாங்கத்துடனும்; இராணுவத்துடனும்; இருக்கும் வரைக்கும் சரி. அவர்கள் எப்போது பொதுமக்களையும் அரசியல் தலைவர்களையும் அதாவது கொலைக் கலாசாரத்தில் அவர்கள் தம்மை என்று ஈடுபடுத்தத் தொடங்கினார்களோ அன்றிலிருந்து அவர்கள் செல்லாக் காசாக மாறிவிட்டனர். அவர்கள் தரம் தாழ்ந்து விட்டனர்.
கேள்வி: வட மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி உங்களைக் கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதில்: ஆம், பல தடவைகள் என்னைக் கேட்டிருந்தார். அதனை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.
கேள்வி: இப்போது எல்லாம் முடிந்து விட்டது. வடக்கு மாகாண தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடும். அப்படித்தானே?
பதில்: இல்லை..இல்லை.. முழுமையாகத் தீர்க்கப்படமாட்டாது. சில சில பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு காணப்படும். அவ்வளவுதான்.
கேள்வி: முழுமையாகத் தீர்க்க முடியாதென்றா நீங்கள் கூற வருகிறீர்கள்?
பதில்: மாகாண சபை ஒன்றினை அமைத்து முதலமைச்சர் ஒருவரைத் தெரிவு செய்தால் பிரச்சினை முடிந்து விடுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரப் பகிர்வு என்பது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் போதாது. அதனை யாரும் எந்த நேரத்திலும் தூக்கியெறிக் கூடியதாகவே இருக்கிறது. சமஷ்டி அல்லது இந்திய முறையிலான தீர்வு மட்டுமே நிரந்தரமாகச் சாத்தியப்படும். ஆனால் இந்த முறையிலான தீர்வு என்பது இனி காலங் கடந்ததாக மாறிவிட்டது.
கேள்வி: தமிழ் கட்சிகள் அனைத்தினையும் ஒன்றிணைதது ஒரே குரலாக உங்களது சமஷ்டிக் கோரிக்கையை அரசிடம் மீண்டும் முன்வைக்கலாமே?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் வரை அது சாத்தியமாகாது.
பேட்டி கண்டவர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
0 விமர்சனங்கள்:
Post a Comment