தண்ணீருக்கடியில் மறைந்து உயிர் வாழ்வதற்கு ஏற்றவகையில் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த பாரியளவிலான உலோக பாதுகாப்புக் கவசம் மீட்பு!!!

தண்ணீருக்கடியில் மறைந்து உயிர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் புலிகளால அமைக்கப்பட்டிருந்த பாரியளவிலான உலோக பாதுகாப்புக் கவசம் படையினரை வியப்படையச் செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு இரண்டை வாய்க்காலை முழுமையாக கைப்பற்றியிருக்கும் படையினர், அங்கு புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி பாதுகாப்பு கவசத்தை நேற்று கண்டுபிடித்துள்ளனர். 




உலோகத்தினால் உருளை வடிவில் இருந்த இந்த பாதுகாப்புக் கவசம் பிரமாண்டமான உருவில் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் அறுபதி அடி நீளமான இந்த உலோக பாதுகாப்பு கவசத்தினுள் பாரிய மூன்று பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
நீருக்கடியில் பாதுகுhப்பு கவசத்தை செலுத்தக் கூடிய வகையிலான இயந்திரம் முன்னால் பொருத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அலுவலக அமைப்பொன்றும் பின்புறமாக ரயில்பெட்டியை போன்றதொரு விசலமான இடப்பரப்பும் கொண்ட பகுதியும் இணைக்கப்பட்டிருந்தது. மிகவும் உறுதியான இரும்புக் கம்பிகள், ரயில்வே தண்டவாளங்கள் ஆகியவற்றைக் கொண்டே இவை அமைக்கப்பட்டுள்ளன. இப்பாதுகாப்பு கவசத்திற்கு மேலதிகமாக கரையிலிருந்து கடலை நோக்கி இந்த கவசத்தை செலுத்தும் வகையில் 300அடி நீளமும் 30அடி ஆழமும் கொண்டதான காவல்வாயொன்று புலிகளால் இந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்ததையும பிரிகேடியர் சுட்டிக்காட்டியுள்ளார். 
படையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு கவசத்தில் அண்மைக் காலத்திலேயே அதனை வெல்டிங் செய்வதற்கான அடையாளங்கள் தென்படுவதால் இராணுவத்தினர் முல்லைத்தீவு நோக்கி முன்னகர்வுகளை மேற்கொண்டிருக்கும் காலப்பகுதிலேயே புலிகள் தப்பியோடுவதற்கு ஏதுவாக இதனை அவசர அவசரமாக தயாரித்திருக்க வேண்டுமெனவும் பிரிகேடியர் கூறியுள்ளார். தமக்கு தேவைப்படும் போது மேற்படி கவசத்தை உடனடியாக கடலுக்குள் செலுத்தும் வகையில் நிலக்கீழ் நீரை பெறும் வகையில் புலிகள் இந்தக் கால்வாயை தோண்டியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த கவசத்தை இயக்குவதற்கு பொருத்தப்பட வேண்டிய சூழலக்கூடிய பிளேடுகளையும் வேறொரு இடத்தில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேற்படி வெட்டப்பட்டிருந்த 300அடி நீளமான கால்வாய் முழுவதும் வெளியே தெரியாதபடி இருபுறமும் இரும்பு சீட்டுக்கள் மறைத்து ஒட்டப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






0 விமர்சனங்கள்:
Post a Comment