வெளிவந்து விட்டது.... "பிரபாகரனின் வாழ்வும் மரணமும்" என்ற புத்தகம்
- பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார்.
- இல்லை, இல்லை அவர் கொல்லப்படவில்லை.
- அது ஒரிஜினல் பிரபாகரன் இல்லை.
- அந்த உடலம் அவருடைய டம்மி.
- அந்த உடலம் பிளாஸ்டிக் சேர்ஜரி செய்தது.
- அந்த உடலின் முகம் ரப்பர் முகம்.
- பிணத்தின் தலையை இலகுவாக எப்படி திருப்பமுடியும்?
- பிரபாகரன் முட்டாள்தனமாக சரணடைந்திருக்க மாட்டார்.
- பிரபாகரனை எவருமே நெருங்க முடியாது.
(இப்படி பல விதமான எண்ணங்கள் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது. சரி அதை விடுத்து விடயத்திற்கு வருவோம்)
- அவர் இறந்து இன்னமும் 15 நாட்கள் கூட ஆகவில்லை
- அவர் எப்படி கொல்லப்பட்டார்? எப்ப கொலப்பட்டார்? எங்கே கொல்லப்பட்டார்? என்ற உண்மையான விபரங்கள் எதுவும் இன்னமும் தெளிவாக வெளிவரவில்லை.
- அவருக்காக இதுவரையில் பகிரங்கமாக எவரும் அஞ்சலி கூட செலுத்தவில்லை.
- அப்படி செலித்திய ஒரு சிலரையும் மிரட்டி மௌனமாக்கிவிட்டார்கள்.
- அவருக்காக ஒரு இரங்கற்பா கூட எழுதவில்லை
- அவரின் இறப்பிற்குப்பின் வெளிநாடுகளில் உள்ள புலிகள் இயக்கத்திற்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.
- இவ்வளவு ஏன் அவர் கொல்லப்பட்டதையே புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்னமும் நம்ப மறுக்கிறார்கள் அல்லது நம்பவிடாமல் தடுக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.
- சிலர் நம்பினாலும் நம்ப மறுப்பது போல் நடிக்கிறார்கள்.
- தமிழ் நாட்டு தலைவர்களில் சிலர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் கொல்லப்படவில்லை என்று கதை வசனம் எழுதி வருகிறார்கள்.
- இன்னும் சிலர் "வெகுவிரைவில் பிரபாகரன் தலைமையில் ஈழப்போர் V தொடங்கும்" என்று தலைப்பு வேறு வைத்துவிட்டார்கள்.
இப்படியான சூழ்நிலையில் அடப்போங்கடா நீங்களும் உங்கட ஆராய்ச்சியும்.... போய் பொழைக்கிற வழியை பார்ப்பீங்களா??? சும்மா தொனதொனன்னுகிட்டு... என்ற ரீதியில் வலு சுறுசுறுப்பாக "பிரபாகரன்: வாழ்வும் மரணமும்" என்ற 203 பக்கங்களைக்கொண்ட புத்தகம் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கும் வெளிவந்துவிட்டது.
"பிரபா எப்படா சாவான் - நாம நம்மட பிழைப்பை நடத்தலாம்" என்று விழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருந்த தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உண்மையிலேயே இவர்கள் பிழைக்கத்தெரிந்த தமிழர்கள்தான்..... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்
புத்தகம் ஓடர் போட பின்வரும் லிங்கை அழுத்துங்கோ.........ஓஓஓஓஓஒ
"பிரபாகரனின் வாழ்வும் மரணமும்"
0 விமர்சனங்கள்:
Post a Comment