மனித வெடிகுண்டுகள் பாதுகாப்பில் பிரபாகரன்-ராணுவம்
கொழும்பு: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த 1,000 மனித வெடிகுண்டுகளுக்கு மத்தயில் இருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. ராணுவத்துக்கும், பிரபாகரனுக்கும் இடையே மிகக் குறைவான தூர இடைவெளியே இருந்தாலும் மனித வெடிகுண்டுகள் சூழ்ந்திருப்பதால் அவரை பிடிப்பது சிரமம் எனக் கருதப்படுகிறது.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. இலங்கை ராணுவம் பயங்கர தாக்குதல் மூலம் விடுதலை புலிகளை வெறும் 4 கிமீ., சதுர பரப்புக்குள் முடக்கியுள்ளது.
அவர்களை ராணுவம் அனைத்து பக்கங்களிலிருந்து சுற்றி வளைத்துள்ளது. இதனால் அவர்களுக்கு வெளியில் இருப்பவர்களிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்க முடியாமல் செய்துவிட்டது. இதையடுத்து அவர்களுக்கு அரணாக இருப்பது வன்னி காடுகள் மட்டுமே. மேலும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் அந்த பகுதிக்குள் இருப்பதாக உறுதியாக நம்புகிறது.
ராணுவம் தற்போது பிரபாகரனுக்கு அருகில் வந்துவிட்டதாகவும், ஆனால், அவரை சுற்றி தற்கொலை படையை சேர்ந்த ஆயிரம் மனித வெடிகுண்டுகள் அரண் போல் இருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவருகம் கமாண்டோ பயிற்சி பெற்றவர்கள் என்றும், தங்களது இயக்கத்துக்காக தங்களை மாய்த்து கொண்டு மிகப்பெரிய உயிர் சேதத்தை விளைவிப்பார்கள் என்பதால் ராணுவம் அதற்கு மேல் முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
விடுதலைப்புலிகள் வசம் இருந்த கரயமுல்லை வாய்க்கால் என்ற இடத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. அப்போது நடந்த சண்டையில் விடுதலை புலிகளுக்கு அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவத்தை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்த அவர்கள் வைத்திருந்த மணல் அரண்களை ராணுவம் தகர்த்து எறிந்தது.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு 2500 அடி அருகாமையில் ராணுவம் முகாமிட்டுள்ளது. சுற்றிலும் 500 முதல் 1000 மனித வெடிகுண்டுகள் பாதுகாப்பு அரணாக இருக்கின்றனர். இவர்களை தவிர்த்து அங்கு 15,000 தமிழர்கள் வரை இருக்ககூடும். அவர்களுக்கு நடுவில் பிரபாகரன் இருக்கிறார் என்றார்.
Thatstamil






0 விமர்சனங்கள்:
Post a Comment