எங்கெங்கே தங்கியிருக்கிறார்கள்?
புலிகளின் பிடியில் சிக்கியிருந்து படையினரால் மீட்கப்பட்ட பொதுமக்கள் வவுனியா நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6ம் திகதி வரையான காலப் பகுதியில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 15 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரியில் 1944 குடும்பங்களைச் சேர்ந்த 5990 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பம்பைமடு பல்கலைக்கழக விடுதியில் 1384 குடும்பங்களைச் சேர்ந்த 4487 பேரும், கோவில் குளம் இந்துக் கல்லூரியில் 530 குடும்பங்களைச் சேர்ந்த 1730 பேரும், காமினி மகா வித்தியாலயத்தில் 754 குடும்பங்களைச் சேர்ந்த 1723 பேரும், பூந்தோட்ட மகா வித்தியாலயத்தில் 483 குடும்பங்களைச் சேர்ந்த 1607 பேரும், வவுனியா தமிழ் மகா வித்தியாலய சிரேஷ்ட பாடசாலையில் 1773 குடும்பங்களைச் சேர்ந்த 4893 பேரும், வவுனியா தமிழ் மகா வித்தியாலய கனிஷ்ட பாடசாலையில் 469 குடும்பங்களைச் சேர்ந்த 1248 பேரும், சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் 1364 குடும்பங்களைச் சேர்ந்த 3429 பேரும், நெலுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் 1494 குடும்பங்களைச் சேர்ந்த 3362 பேரும், வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 507 கும்பங்களைச் சேர்ந்த 1531 பேரும், புதுக்குளம் பாடசாலையில் 1099 குடும்பங்களைச் சேர்ந்த 3024 பேரும், கந்தபுரம் வாணி வித்தியாலயத்தில் 425 குடும்பங்களைச் சேர்ந்த 1100 குடும்பங்களும், தாண்டிக் குளம் பாடசாலையில் 566 குடுமபங்களைச் சேர்ந்த 1502 பேரும், வெளிக்குளம் பாடசாலையில் 436 குடும்பங்களைச் சேர்ந்த 1227 பேரும், கேமரசங்குளம் மகா வித்தியாலயத்தில் 732 குடும்பங்களைச் சேர்ந்த 2153 பேரும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஙெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆனந்த குமாரசுவாமி (வலயம்- 1) நலன்புரி கிராமத்தில் 14,425 பேரும், பொன், இராமநாதன் (வலயம்-2) நலன்புரி கிராமத்தில் 15,770 குடும்பங்களைச் சேர்ந்த 51,290 பேரும் அருணாச்சலம் (வலயம் -3) நலன்புரி கிராமத்தில் 12, 370 குடும்பங்களைச் சேர்ந்த 39,030 பேரும், அறிவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் 365 குடும்பங்களைச் சேர்ந்த 1174 பேரும், செட்டிக்குளம் மகா வித்தியாலயத்தில் 549 குடும்பங்களைச் சேர்ந்த 1790 பேரும், மெனிக் பாம் கதிர்காமர் நலன்புரி கிராமத்தில் 5851 குடும்பங்களைச் சேர்ந்த 22,303 பேரும் ஆண்டியா புளியங்குளத்தில் 492 குடும்பங்களைச் சேர்ந்த 1548 பேருமாக 1,70,566 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தொகை மக்கள் இடம் பெயர்ந்து பாதுகாப்பு பிரதேசத்திற்கு வந்துள்ளமை வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும்.






0 விமர்சனங்கள்:
Post a Comment