பிரபாகரனை கைது செய்யும் நோக்கில் படையினர் விஷேட தேடுதல் நடவடிக்கை!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கைது செய்யும் நோக்கில் படையினர் விஷேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
விடுதலைப்புலிகளை 600மீற்றர் பரப்பளவிற்குள் முடக்கியுள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பாவி பொதுமக்களை மீட்டதன் பின்னர் புலிகளின் தலைவரை கைது செய்வதற்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் விஷேட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் நான்காவது ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வருவதே படையினரின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் தலைவர் தப்பிச் செல்ல முயற்சி செய்யக்கூடும் எனவும் அவரை உயிருடன் பிடிப்பதே படையினரின் முக்கிய இலக்காக அமைந்துள்ளதெனவும் படையினர் தெரிவித்துள்ளனர்.






0 விமர்சனங்கள்:
Post a Comment