மோதல்ப் பகுதி மக்கள் உறவினர்களுடன் இணைவதற்கான விசாவை கனடா துரிதப்படுத்தியுள்ளது
மோதல்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் உறவினர்களுடன் இணைந்துகொள்வதற்கான குடிவரவு விண்ணப்பங்களை கனடா அரசாங்கம் துரிதப்படுத்தியிருப்பதாக கனடா குடிவரவுத்துறை அமைச்சர் ஜாசன் கென்னே தெரிவித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் கனடா வருவதற்காக, கனடியப் பிரஜைகள் மேற்கொண்டிருக்கும் குடும்ப அனுசரணை விண்ணப்பங்களை தாம் தொடர்ந்து முன்னெடுத்துவருவதாகக் கூறிய அவர், கொழும்பிலிருக்கும் தமது தூதரகத்தின் மூலம் அவற்றை துரிதப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டார். கொழும்பிலிருக்கும் கனடாவின் விசா அலுவலகம் தற்போது இதற்கு அதிக முன்னுரிமையளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment