பிரபாகரனின் பெற்றோர் நலன்புரி நிலையத்திலிருந்து செல்ல அனுமதியில்லை: இராணுவம்
வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பெற்றோர் அவர்களின் உறவினர்களுடன் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என இராணுவம் தெரிவித்துள்ளது.
நலன்புரி நிலையங்களிலுள்ள முதியவர்களை வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளபோதும், பிரபாகரனின் பெற்றோருடைய பாதுகாப்புக் கருதி அவர்களை வெளியேற அனுமதிக்கப்போவதில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்தார்.
“பிரபாகரனின் பெற்றோர் தனியாகவே தங்கவைக்கப்படுவார்கள். அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.
வன்னியில் இறுதியாக நடைபெற்ற மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தையாரும், தாயாரும் பொதுமக்களுடன் இடம்பெயர்ந்து வவுனியா சென்றதுடன், அவர்கள் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
இடம்பெயர்ந்த ஏனைய பொதுமக்களுடன் ஒப்பிடுகையில் பிரபாகரனின் பெற்றோருடைய நிலைமை நன்றாக இருந்தது என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment