மனிதாபிமான அடிப்படையில் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மன்னிக்கப்பட வேண்டும்
புலித்தலைமை தண்டிக்கப்பட வேண்டியதே. அது இன்று தண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனால், புலித்தலைமையால் பலவந்தமாகக் கடத்தப்பட் டும், மூளைச் சலவை செய்யப்பட்டும் அழிவு யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவி பெற் றோர்களது பிள்ளைகள் மன்னிக்கப்படல் வேண் டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடந்த 27ம் திகதி வவுனியா நகரில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியதாவது,
1971 மற்றும் 1989 கால கட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு மன் னிப்பு வழங்கப்பட்டது போல் மேற்படி புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு வழங் கப்படல் வேண்டும் எனத் தெரிவித்ததுடன் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது தற்காலிக நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் ஆறு மாத காலத்திற்குள் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் என்றும் அதுகால வரையில் இம்மக்களுக்கான மேம் பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படல் வேண் டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்ந்த நிலையில் வவுனியாவில் தங்கியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு வர்த்தகப் பெருமக்களுடன் இணைந்து வன்னி மக்கள் மேம்பாட்டு நிதியம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் மூலமும் மகேஸ்வரி நிதியத்தின் மூலமும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், சமய மற்றும் பொது அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் மூலமும் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான உதவிப் பொருட்கள் இம்மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பில் விளக்கிக் கூறிய ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் போட் டியிடுவது குறித்து தற்போது கட்சிக்குள் ஆரா யப்பட்டு வருகிறது. இதற்கு முன் எமக்கான நிலைமைகளை நாம் சரிவரப் பயன்படுத்தாமை யினால் எமது மக்கள் இன்று இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த நிலையில் பலகோணங்களில் நன்றாக ஆராய்ந்து பார்த்தே நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
இதுவரை காலமும் தமிழ் மக்கள் முன் வன்முறை சார்ந்த வழி என்றும் ஜனநாயக வழி என்றும் இரு வழிமுறைகள் இருந்து வந்தன. ஆனால் இப்போது வன்முறை வழி அழிந்து ஜனநாயக வழிமுறை மட்டுமே எமது மக்கள் முன் இருக்கிறது.
இதுவரையில் பிரபாகரன் மூலமும் பிரபாக ரனின் பெயராலும் நடந்த அழிவுகள் எமது மக் களை பாரிய பின்னடைவுக்கு தள்ளிவிட்டுள்ளது. இனிமேல் அப்படி ஒரு நிலை எமது மக்களுக்கு வராதிருக்க நாம் ஜனநாயக வழியில் உரிய செயற் பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச் சர் டக்ளஸ் உணர்த்திக் குறிப்பிட்டார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment