புலிகளின் உளவுப்பிரிவில் வேலை செய்த `கனடியர்` வவுனியாவில் கைது
கொழும்பு மவுன்லேனியா பொலிஸ் கடந்த வெள்ளிகிழமை (மே. 29) புலிகளின் உளவுப்பிரிவில் வேலை செய்துள்ளாரென்ற குற்றச்சாட்டப்படும் தவராசா மதன் என்பவரின் மனைவியை கைது செய்துள்ளது.
இவரின் மனைவி சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். தவராசா மதன் என்பவர் கொழும்பு, தெஹிவளவில் அச்சக தொழிற் கூடம் ஒன்றைத் தொடங்கிய போது அதில் வேலை செய்ய இணைந்த மேற்படி பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது தவராசா மதன் வவுனியவில் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் இருந்து இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்த வேளைகளில் தவராசா மதன் பலதடவை கிளிநொச்சிக்கு பயணம் செய்துள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் கனடாவில் வசித்த தவராசா மதன் தனது சகோதரி சகிதம் கொழும்பு தெஹிவள பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment