புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையரை திருப்பியனுப்ப சுவிஸ் பாராளுமன்றம் அங்கீகாரம்
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப அந்நாட்டு பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து, புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக கடந்த வார ஆரம்பத்தில் சுவிட்ஸர்லாந்து பாராளுமன்றத்தின் செனட் சபை வாக்களித்தது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபையும் மேற்படி தீர்மானத்தை ஆதரித்துள்ளது. எனினும் இலங்கையில் பிரச்சினையுள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் யாரும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என சுவிஸ் நீதி அமைச்சர் கூறினார். சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்ப அந்நாட்டு பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்து புகலிடம் நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக கடந்த வார ஆரம்பத்தில் சுவிட்ஸர்லாந்து பாராளுமன்றத்தின் செனட் சபை வாக்களித்தது. இந்நிலையில், பிரதிநிதிகள் சபையும் மேற்படி தீர்மானத்தை ஆதரித்துள்ளது.
எனினும் இலங்கையில் பிரச்சினையுள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் யாரும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என சுவிஸ் நீதி அமைச்சர் கூறினார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment