யாழ். மக்களின் நீண்டகால ஏக்கம் நிறைவேறும் தருணம்
யாழ். குடா நாட்டுக்குரிய தரை வழியான பொருள் போக்கு வரத்து நீண்ட காலத்துக்குப் பின்னர் எதிர்வரும் பதினெட்டாம் திகதி வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பமாகப் போகிறது. யாழ். குடா நாட்டுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு முதல் கட்டமாக நூற்று இருபது லொறிகள் எதிர்வரும் வியாழக் கிழமை தரைமார்க்கமாக யாழ்ப்பா ணத்துக்குப் புறப்படவிருக்கின்றன.
வட பகுதி மக்களைப் பொறுத்த வரை அவர்களது நீண்ட கால ஏக்கம் இப்போது நிறைவேறப் போகிறதெனச் சொல்லலாம்.
தரைவழிப் போக்குவரத்து நீண்ட கால மாகத் தடைப்பட்டிருந்ததனால் யாழ். குடா நாட்டு மக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல... யாழ். குடா நாட்டு மக்கள் தென் பகுதிக்கான தங்களது பயணத்தை விமானம் மூலமே மேற்கொண்டனர். இதற்காக பெருமளவு பணத்தைக் கட்டணமாகச் செலுத்தி வருகின்றனர்.
அதேசமயம், வட பகுதிக்கான தரைவழி பொருள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு நீண்ட காலமாகிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கப்பல் மூலமே யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. சில பொருட்கள் விமானம் மூலமும் எடுத்துச் செல்லப் படுகின்றன.
இதற்காக போக்குவரத்துக் கட்டணம் கூடுதலாக அறிவிடப்படுகிறது. எனவே, யாழ். குடா நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது தவிர்க்க முடியா ததாகி விடுகிறது. அங்குள்ள மக்களின் வாழ்க்கைச் செலவிலும் அதிகரிப்பு ஏற்ப டுகிறது. அம்மக்களின் வாழ்க்கையில் இதுவரை காலமும் இருந்து வந்தபெரும் சுமையென இதனைக் கூறலாம்.
தரைவழியான பொருள் போக்குவரத்து இப்போது ஆரம்பமாகப் போகிறது. இதன் மூலம்தென்னிலங்கைக்கு நிகராக வட பகுதியிலும் பொருட்களின் விலை கள் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடு மென்பது உறுதி. அது மாத்திரமன்றி தென்னிலங்கையில் கிடைக்கும் அத்தனை பொருட்களையும் வட பகுதி மக்கள் இனிமேல் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ள வழியேற்படப் போகி றது. அம்மக்களின் வாழ்க்கைச் செலவு இனிமேல் கணிசமான அளவு குறையு மெனவும் எதிர்பார்க்கலாம்.
இது ஒருபுறமிருக்க யாழ். குடாநாட்டு க்கு தரை வழிப்போக்குவரத்தில் ஈடுபடு வதற்கு தனியார் லொறிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதனால் வட பகுதி மக்களுக்கு மற்றொரு நன்மை கிடைக்கப் போகிறது.
வட பகுதியில் உற்பத்தியாகும் பொரு ட்கள் அனைத்துமே இனிமேல் தரைவழி யாக தென்னிலங்கைக்கு அனுப்பப் படுவதற்கு வழியேற்படப் போகிறது. இதன் மூலம் வட பகுதி உற்பத்தியா ளர்கள் நியாயமான வருமானம் ஈட்டுவது ஒருபுறமிருக்க உப உணவுப் பொருட் களின் விலைகள் தென்னிலங்கையில் குறை வடைவதற்கும் வழியேற்படப் போகிறது.
யாழ். குடா நாடு விவசாயத்துக்குப் பெயர் போன நிலமாகும். மரக்கறி, பழங்கள் மற்றும் உப உணவுச் செய்கை யில் முன்னொரு காலத்தில் தலைசிறந்த பிரதேசமாக வட பகுதி விளங்கியது.
ஆனால் இடைப்பட்ட காலப்பகுதியில் பயிர்ச் செய்கைக்கான வசதி வாய்ப்புகள் மற்றும் சந்தை வாய்ப்புக் குறைந்ததனால் வடக்கில் விவசாயச் செய்கை வீழ்ச்சிய டைந்தது. அதே போல மீன்பிடித் தொழி லும் வீழ்ச்சியடைந்தது. உற்பத்தித் துறை யைப் பொறுத்த வரை சந்தை வாய்ப் பின்றி பிரயோசனம் ஏற்படப் போவதில்லை.
வட பகுதிக்கான தரை வழி பொருள் போக்குவரத்து சீரடையுமானால் அங்கு ள்ள விவசாயிகள், கடற்றொழிலாளர்கள் உட்பட உற்பத்தியாளர்கள் அனைவருமே சந்தை வாய்ப்பைப் பெற்று நன்மையடை வரென்பது உறுதி. இதனை வடக்கின் வசந்த த்துக்கான ஆரம்பமாகவும் கொள்ளலாம்.
0 விமர்சனங்கள்:
Post a Comment