மைக்கல் ஜாக்சன்: இவன் ஒரு புலமைப் பித்தன்
மேற்குலகில் இருந்துவரும் பெரும் இசைப்புயல்கள் அவ்வப்போது ஏனைய நாடுகளைத் தாக்கி துவம்சம் செய்வது வழக்கம். இலங்கை இசை ரசிகர்களையும் மேற்குலகப் பாடகர்கள் புரட்டிப் போட்டு விடுவதுண்டு. ஐம்பதுகளில் ரொக் அண்ட் ரோல் இசையை உலகுக்கு அறிமுகம் செய்த எல்விஸ் பிரஸ்லியே பொப் இசை என்ற துள்ளாட்ட இசையை நமக்குத் தந்தவர். எனினும் இவரது பாடல்கள் இலங்கை யின் ஆங்கிலம் தெரிந்த உயர் தட்டு குடும்பங்கள் மத்தியிலேயே பிரபலம் பெற்றிருந்தனவே தவிர அவரது பாடல்கள் சாதாரண மக்களைச் சென்றடையவில்லை.
எல்விஸ் காலம் முடிவுறும் தறுவாயில் அமெரிக்காவில் இருந்து மற்றொரு புயல் கிளம்பியது. அது எல்விஸ் பிரஸ் லியின் சாதனைகளை உலகெங்கும் முறியடித்து மேல்நாட்டு பொப் இசைக்கே புதிய வடிவத்தை அமைத்துக் கொடுத்தது. ஆங்கில பொப்பிசையின் இளமை, இனிமை, புதுமையை வடித்தெடுத்து வடிவமைத்துக் கொடுத்த அந்த இசைதான் ‘பீட்டிள்ஸ்’ இசை.
இங்கிலாந்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் இணைந்து அறுபதுகளில் உருவாக்கிய பீட்டில்ஸ் இசைக் குழு கண்டங்களையே இசை மழையில் நனைத்தது. பீட்டிள்ஸ் இசை கேட்டும் அவர்கள் அறிமுகப்படுத்திய புதிய இளைஞர் நாகரிகத்தை பின்பற்றியும் உலக இளைஞர் சமுதாயம் பித்துப் பிடித்துப் போனது. இலங்கை இளைஞர்கள் மத்தியில் நியாயமான தாக்கத்தை அது ஏற்படுத்தியது. பீட்டிள்ஸ் பாடல்கள், ஸ்டைல்களால் கவர்ந்திழுக்கப்பட்ட கொழும்பு இளைஞர்கள் புதிய ஆங்கில இசைக்குழுக்களை அமைத்து ஆங்கில பொப் இசையை இங்கே பாடத் தொடங்கினார்கள். உல்லாச ஹோட்டல்களிலும் திருமண வைபவங்களிலும் அதுவரை ட்ரம்பட், செக்ஸபோன், எக்கோடியன், பியானோ என இசை வழங்கிக் கொண்டிருந்தவர்களுக்குப் பதிலாக பீட்டில்ஸ்களின் பொங்கி வழியும் துள்ளாட்ட இசையை இளைஞர்கள் வழங்கத் தொடங்கினார்கள.
எழுபதுகளில் ஏராளமான மேனாட்டு இசைக் குழுக்கள் நம்மை வவசீகரிக்கக் கிளம்பி வந்தன. அவர்களில் அபா, பொனிஎம் என்பன முக்கியமானவை. இவ்விரண்டு இசைக் குழுக்களும் ஆங்கில இசையையோ அல்லது ஆங்கிலேய மொழி, கலாசாரத்தோடு ஒட்டுறவே இல்லாத சாதாரண இலங்கை மக்களை குறிப்பாக இளைஞர்களை ஈர்த்தமை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது. பிலீrnanனீo, கிy thலீ ஞிivலீr oஜீ கிabylon, ஞிasputin போன்ற பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். ‘புக்கி பேப்ப’ரை வாசித்து புரிந்துகொள்ள எப்படி ஆங்கில அறிவு பலருக்கு அவசியமில்லையோ அவ்வாறே அபா, போனிஎம் பாடல்களை ரசிக்கவும் லயித்துப்போகவும் ஆங்கிலம் அவர்களுக்கு அவசியப்பட்டிருக்கவில்லை.
இவ்விரண்டு மெகா இசைக் குழுக்களின் பின்னர் உலகையே இசை வெள்ளத்தில் ஆழ்த்த வந்தவர்தான் மைக்கல் ஜெக்சன். அவரது பாணி பீட்டில்ஸ¤டையதாகவோ அபா, போனி எம் உடையதாகவோ இருக்கவில்லை. அவர் பெரும்பாலும் சொந்தப் பாணியையே மேடைகளில் கையாண்டாலும் எல்விஸ் பிரஸ்லியின் சாயலை அது ஒத்திருந்தது. எல்விஸ் பிரஸ்லி பாடும்போது பல சேஷ்டைகளைச் செய்வார்.
கிடார் இசைத்தபடி நடனமாடி பாடுவார். அதில் ஒரு வேகமும் வசீகரமும் இருக்கும். சுபாவத்திலேயே பெண்மை கலந்த ஆண்மைத் தோற்றத்தைக் கொண்டிருந்த பிரஸ்லிக்கு பித்துப் பிடித்துப் போயிருந்த இலட்சக்கணக்கான பெண் விசிறிகள் இருந்தனர். அதே மாதிரியான பெரும் பித்துப் பிடித்த மில்லியன் கணக்கான ஆண் பெண் விசிறிகள் ஜெக்சனின் அசைவுகளை பின்பற்றிச் சென்றனர். அவரது அசைவுகளிலும் குரலிலும் மெல்லிய காமம் கலந்திருக்கும் – ஜரிதா பீடா மாதிரி!
ஜெக்சன் கடந்த சில ஆண்டுகளாக பெரும் மேடைக் கச்சேரிகளை செய்யவில்லை. புதிய இசைத் தொகுப்புகளை வெளியிடவில்லை. வழமை போலவே மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சந்தடியற்ற வாழ்க்கையை பல புரளிகள், ஊகங்கள், சந்தேகங்களுக்கு மத்தியில் நகர்த்திக் கொண்டிருந்ததால் மக்கள் அவரைக் கொஞ்சம் மறந்திருந்தனர். கடந்த வியாழன் அவர் தனது லொஸ் ஏன்ஜலிஸ் வாடகை வீட்டில் மாரடைப்பினால் திடீரென 50 வது வயதில் மரணமான செய்தி உலகெங்கும் காட்டுத் தீயாகப் பரவிய பின்னரேயே, என்னத்தை நாம் இழந்திருக்கிறோம் என்பதை மக்கள் இப்போது புரிந்துகொண்டு பதைபதைத்து நிற்கிறார்கள்.
அவர் இசையுலகில் இருந்து முற்று முழுதாக விலகி ஓய்வெடுக்கப் போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் அறிவித்திருந்தார். இதையடுத்து தன் இறுதி மெகாமேடை நிகழ்ச்சியையும் அவர் அறிவித்திருந்தார். இந்நிகழ்ச்சி லண்டனில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. டிக்கட் விற்பனை ஆரம்பித்த தினமே அனைத்து டிக்கெட்டுகளும் சில மணித்தியாலங்களில் விற்றுத் தீர்ந்திருந்தன.
எனினும் ஜெக்சன் தன் உடல்நிலை காரணமாக நடைபெறும் திகதியை பின்போட்டு வந்தார். இறுதியாக ஜுலை மாதம் இந்த இறுதி மேடை நிகழ்ச்சியை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தார். அந்த நிகழ்ச்சி இனி எப்போதுமே நடைபெறப் போவதில்லை. இதில் விசேஷம் இந்த இசை நிகழ்ச்சிக்கு அவர் சூட்டியிருந்த பெயர். ஹிhலீ ஜீinal விurtain என்பதே நிகழ்ச்சியின் பெயர். இறுதியாக மூடப்படும் திரை என்று இதைக் கெள்ளலாம். தன் இசை வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்பதை அறிவிக்கு முகமாக இப் பெயரை அவர் சூட்யிருந்தாலும், மறை பொருளாக மற்றொரு அர்த்தமும் அங்கே தொக்கி நின்றிருக்கிறது என்பது இப்போது தான் புரிகின்றது. இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னரேயே தன் வாழ்க்கை நாடகத் திரையை இழுத்து மூடிக்கொண்டார் மைக்கல் ஜெக்சன்.
கிடார் இசைக் கலைஞனான ஜோசப் ஜெக்சன் - கத்தரின் தம்பதியினருக்கு ஆறாவது குழந்தையாக மைக்கல் ஜெக்சன் 1958 ம் ஆண்டு அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் காரி என்ற நகரில் பிறந்தார். பெரிய குடும்பம். ரெபி ஜெக்சன், ஜெக்கி ஜெக்சன், டிட்டோ ஜெக்சன், ஜெர்மைன் ஜெக்சன், லடோயா ஜெக்சன், மார்லன் ஜெக்சன், ரென்டி ஜெக்சன், ஜெனட் ஜெக்சன் என ஒன்பது குழந்தைகள். கிடார் வாசித்து வந்த ஜெக்சனின் தந்தை, திருமணத்தின் பின்னர் கிடார் வாசிப்பதை கைவிட்டு வேறு வேலைக்குப் போய்விட்டார். எனினும் இசை மீதான அக்குடும்பத்தின் காதல் மட்டும் அகலவே இல்லை. எனவே அறுபதுகளிலேயே ஜெக்கி, டிட்டோ, ஜெர்மைன் ஆகிய மூவரும் இசைக்குழு ஒன்றை அமைத்து அந்நகரத்தில் நிகழ்ச்சிகள் நடத்த ஆரம்பித்திருந்தார்கள். இக்குழுவோடு மைக்கலும் மார்லனும் பின்னர் இணைந்து கொண்டதும் இக்குழுவின் பெயர் ஜெக்சன் 5 என்றானது.
ஆங்கில துள்ளாட்ட இசையில் ஒரு குரலிசை மூலம் வெற்றி பெற்றவர் சிலரே. எல்விஸ் பிரஸ் லியின் பின்னர் சோலோ பாடி பெரு வெற்றி பெற்றவர் மைக்கல் ஜெக்சன். அவர் பொப்பிசை சக்கரவர்த்தியாகக் கொண்டாடப்படுவதற்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன. நமது அரசியல்வாதிகளோ, சாமியார்களோ, வேறு துறை விற்பன்னர்களோ புகழ் அடைவதற்கு தமது திறமையை மட்டும் நம்பியிருப்பதில்லை. ஊடக விளம்பரத்தையும் மேலும் பகட்டு பாதி புரளி மீதி என கட்டி எழுப்பப்படும் ஜிகினா தோரணங்களையும் பெரிதும் நம்பியிருப்பார்கள். இவைதான் அவர்களைச் சுற்றி ஒரு மாயையை உருவாக்கி வைக்கும்.
மைக்கல் ஜெக்சன் உண்மையாகவே படு திறமைசாலியாகவும் புதிய விஷயங்களை சொந்தத்தில் படைத்து, கட்டி எழுப்பி நிர்மாணிப்பவராகவும் விளங்கினார். அவர் போலியாக எதையும் செய்யாததால் இலங்கை இசைக் கலைஞர்கள் உட்பட உலகெங்கும் உள்ள இசைக் கலைஞர்களும் பாடகர்களும் மட்டுமின்றி பொழுது போக்கு மற்றும் களியாட்டத் துறைசார்ந்தவர்களும் தமது படைப்பாற்றல் விருத்திக்காக, நாம் சத்துணவுகளை விழுங்குவது போல, ஜெக்சனை உள்வாங்கிக் கொண்டார்கள்.
கொஞ்சம் அவதானமாக சிந்தித்தால் ரஜினி ஸ்டைல்களில் ‘மைக்கல் மெஜிக்’ ஒளிந்திருப்பதை அவதானிக்கலாம். நமது பிரபுதேவா, ராகவேந்திரா லோரன்ஸ், இன்றைய எல்லா டான்ஸ் மாஸ்டர்களின் நடன அசைவுகள், இசை அமைக்கும் பாணிகள், பாடல்கள் புனையப்படும் விதம், சாதாரண திருமணங்களில் ‘ரெண்டு ஷொட்’ போட்டுவிட்டு நடனமாடுபவர்களின் அசைவுகள் என எல்லா இடங்களிலும் இந்த அற்புதமான ‘ஸ்ப்ரிங் ஜீனியஸ்’ நீக்கமற நிறைந்திருப்பதை அவதானிக்கலாம். அதாவது தற்கால உலகளாவிய வெகுஜன இசையையே புரட்டிப் போட்டுவிட்டார் மைக்கல் ஜெக்சன்.
எனினும் இந்த இசை பிரம்மாவின் வாழ்வின் அடுத்த பக்கம் சோகமானது. பிரச்சினைகள் நிறைந்தது. அவர் யார் என்பது அவருக்கே தான் தெரிந்திருந்ததோ என்னவோ, மிகப் பெரும்பாலானோருக்கு அவர் யார் எனத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லைதான். ஆனால் அவர் மிகப் புகழ்பெற்றவராயிற்றே!
மைக்கல் சுய பால் புணர்ச்சியில் விருப்பு கொண்டவர் என்பது பரவலான அபிப்பிராயம். இதை அவர் வெளிப்படையாக மறுக்கவும் இல்லை. எலிஸபெத் டெய்லர் முதல் லிசாரே வரை அவருக்கு பல புகழ்பெற்ற பெண்கள் தோழர்களாக இருந்த போதிலும் இரண்டு திருமணங்கள் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக விளங்கிய போதிலும் இந்தப் பெயர் அவரை விட்டு மறையவே இல்லை.
அவர் டெட்டும் ஓ நீல் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டிருந்தார். ஜெக்சனை நெருக்க மாக அறிந்தவர்கள், அவர் உண்மையாகவே காதலித்த ஒரே பெண் இவராகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதேசமயம் அவர் திருமணங்களை செய்து கொண்டதெல்லாம் வெளி உலகை நம்ப வைப்பதற்காகத்தான் என்ற கருத்தும் உண்டு.
மைக்கல் யாரைத் தன் குருவாகக் கருதியிரு க்க முடியுமோ அவருடைய மகளையே – லிஸா பிரஸ்லி – விமரிசையான திருமண த்தில் மனைவியாக்கிக் கொண்டார். எனினும் இரண்டு வருடங்களில் (1994 – 1996) விவா கரத்தில் முடிந்தது பந்தம். பின்னர் டெப்பி ரோவே என்ற பெண்மணியை திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தை யானார். இரண்டரை வருடங்களில் இதுவும் முடிவுக்கு வந்தது. திருமணங்கள் முறிந்து போவதற்கு இவர் குடும்ப வாழ்க்கைக்கு பொருத்தமற்றிருந்தது தான் காரணமா இல்லை யேல் இவரது வித்தியாசமான சுவைகள் தான் காரணமா? என்பது ஊகங்களுக்குத் தான் இன்றளவும் விடப்பட்டுள்ளன.
இது இப்படி என்றால் நூறு கோடி டொலர்கள் வரை சம்பாதித்திருக்கக் கூடிய இவர் விட்டுச் சென்றிருப்பது 50 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை! அவர் ஆசைப்பட்டு வாங்கி மிருகக் காட்சிச் சாலை ஒன்றையும் கூட உருவாக்கி வைத்திருந்த இரண்டாயிரம் ஏக்கர் நெவர்லேண்ட் பண்ணையும் பிரமாண்டமான அவர் மாளிகையும் கடனில் மூழ்கிக் கொண்டிருந்ததால் தான் லண்டனில் இறுதி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர் முன்வந்தார் என சொல்லப்படுகிறது. படைப்பாற்றலில் மன்னனாக வின்னனாகத் திகழ்ந்த மைக்கல், மறுபக்கத்தில் ஏமாறுபவராகவும், ஊதாரியாகவும், முன்னெச்சரிக்கை உணர்வற்றவராகவும் திகழ்ந்திருக்கிறார். மொஸார்ட், பீத்தோவன், தியாகராஜ பாகவதர், கலைவாணர் ஆகியோரும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.
சிறுவர்களை நேசிப்பவராகத் தன்னைக் கூறிக்கொண்ட அவர் சமூக நலக் காரியங்களுக்கு நிறைய செலவு செய்துமிருக்கிறார். சம்பாதித்ததும் அப்படி; செலவு செய்ததும் அப்படியே!
1982 இல் புகழ்பெற்ற ‘த்ரில்லர்’ இசைத் தொகுப்பு வெளியானது. மொத்தமாக நான்கு கோடி 70 லட்சம் பிரதிகள் விற்பனையாகி உலக சாதனையை இது நிறுவியது. 1987 இல் அவரது ‘பேட்’ இசைத் தொகுப்பு வெளியாகி இரண்டு கோடி பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. 1991 இல் வெளியான ‘டேன்ஜரஸ்’ இசைத் தொகுப்பும் இரண்டு கோடி பிரதிகள் விற்பனையைத் தொட்டது. ‘மைக்கல் ஜெக்சன்: த அல் டிமேட் கெலெக்ஷன்’ என்ற பாடல் தொகுப்பு 2004 இல் இரண்டரை இலட்சம் பிரதிகளாக விற்பனையானது.
அவரது தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறிருந்தபோதிலும் அவரது இசை வாழ்க்கையும் இவர் மீது உலகமே கொண்டிருந்த இமேஜும் பாதிக்கப்படவில்லை. ஏனெனில் அவர் வழங்கியிருந்த இசைக் கொடை அவ்வாறானது.
மைக்கல் ஜெக்சன் படைப்பாற்றல் மிக்க இசை மேதையாக இருந்ததால்தான் அவர் சாதாரண வாழ்க்கையைக் கையாளத் தெரியாதவராகவும் இருக்க நேர்ந்தது என்ற ஒரு விமர்சனமும் இருக்கிறது. கறுப்பு சருமத்தைக் கொண்ட நமக்கு சிவப்புத் தோலுடன் பிறந்திருக்கலாமே என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. நமது பிள்ளைகள் சிவப்பாகப் பிறந்தால் தான் நமக்கு நிம்மதி. இது ஒரு தாழ்வுச் சிக்கல். 50 மற்றும் அறுபதுகளில் அமெரிக்காவில் நிலவிய நிறப் பாகுபாடு ஜெக்சனைப் பாதித்திருக்கலாம். இதனால் தன் சருமத்தை ‘பிZச்’ செய்து சருமத்தின் உண்மையான வர்ணத்தை மாற்றிக் கொண்டார் என்றும் இதன் விளைவாக சரும வியாதிக்கு உட்பட்டு கஷ்டப்பட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அறுவை சிகிச்சை மூலம் தன் நெற்றியையும் மூக்கையும் மாற்றிக் கொண்டதாக அவரே ஒப்புகொண்டிருக்கிறார். இதற்கு மேலாக உதடு, கன்ன எலும்பு, ஒற்றை நாடியை இரட்டை நாடியாக்கிக் கொண்ட சிகிச்சை எனப் பல சிகிச்சைகளை செய்து கொண்டதில் நோயாளரானார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேடைகளில் இவர் பயன்படுத்தியது மூன்வோக் என்ற கிறக்கியடிக்கும் ஒரு சாகஸ நடை. ஒரு ரோபோவைப் போல அங்க அசைவுகள், உயர் ஸ்தாயியின் பாடல், அடுத் தடுத்து அவிழ்த்துவிடப்படும் ஸ்ரிடைல்கள்.... அவன் ஒரு இசை புலமைப் பித்தன்!
எல்விஸ் பிரஸ்லி முதல் மைக்கல் ஜெக்சன் வரை சர்வதேச இசை உலகில் புரட்சிகர மாற்றங்களை சிலர் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார்கள். எனினும் மாற்றங்கள் தொடர வேண்டும் என்பதால்,
இன்னொரு இசை மீட்(டு)ப(வ)ருக்காகக் காத்திருப்போம்!
அருள் சத்தியநாதன்
0 விமர்சனங்கள்:
Post a Comment