இறுதியுத்தத்தின் போது ஊடகங்களின் செயற்பாடு
விமர்சனம் என்ற இந்த பத்தி (கொழும்பு) இதுவரை காலமும் மனிதாபிமான செய்திகள் அறிக்கையிடும் போது ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டனவென்ற ஆய்வை மேற்கொண்டு வந்தது. இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்துக்குள் இடம்பெற்ற குறிப்பிடக்கூடிய சம்பவங்கள் ஊடகங்களுக்கு குறிப்பிடக்கூடியதாக இருந்ததை போலவே ஆய்வை மேற்கொள்ளும் எமக்கும் குறிப்பிடக்கூடியதாக விருந்ததே இப்பத்தியை எழுதக் காரணமாகவிருந்தது.
அந்த குறிப்பிடக்கூடிய சம்பவம் என்னவென்றால் மே மாதம் 19ஆம் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்ததே. யுத்தம் முடிவுக்கு வந்தது என்ற அறிவிப்பை போல் பிரபாகரன் கொல்லப்பட்ட செதி இலங்கைக்கு மாத்திரம் முக்கியமான செய்தியாக இருக்கவில்லை. அது உலகம் முழுவதற்கும் முக்கியமான செதியாக இருந்தது. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ள விதம் குறித்து முழுவதுமாக ஆவு செவது மற்றும் அது குறித்து ஒருமித்த கருத்தை சுருக்கமாக தெரிவிப்பது இலகுவான விடயமல்ல என்பதை குறிப்பிட்ட சில நாட்களில் ஊடகங்கள் குறித்து கவனம் செலுத்தியவர்கள் உணரக்கூடியதாகவிருந்திருக்கும். ஒருபுறம் இச்சம்பவத்தை பின்னணியாக கொண்ட ஊடக செயற்பாடுகள் அறிக்கையிட்ட நாள், இரண்டுக்கும் மட்டுமின்றி அந்தவாரம் முழவதும் இதே செதிகள் வெளிவந்த வண்ணமிருந்தன. முக்கியத்துவம் அளிக்கப்படாவிட்டாலும் அதற்கு மறுவாரமும் ஊடகங்களின் கவனம் இது குறித்தே காணப்பட்டது. பெரும் களியாட்டங்களின் உஷ்ணம் இப்போது படிப்படியாக குறைந்து கொண்டு போவதை காணக்கூடியதாகவுள்ளது. எது எப்படி இருந்த போதும் ஊடக ஆவை மேற்கொண்ட போது இந்நாட்டின் ஊடக செயற்பாட்டின் போக்கு, ஒழுக்கநெறி தொடர்பான நிலை மட்டும் தொழில்சார் நிபுணத்துவம் குறித்து இனங்காண்பதற்கு உதாரணங்கள் உருவானதை காணக்கூடியதாகவிருந்தது. பின்னர் இது குறித்து தெளிவான ஆவை மேற்கொள்ளும் வரை மிக சுருக்கமான கருத்தை இங்கு முன்வைக்கின்றோம்.
இச்சம்பவம் மே மாதம் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான ஒரு வார காலத்துக்குள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. யுத்தம் முடிவுற்றது தொடர்பான செய்தி மே மாதம் 18ஆம் திகதி முதன்முதலில் இலத்திரனியல் ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் வெளியானது. இதில் முக்கியத்துவம் பெற்று காணப்பட்டது பிரபாகரன் கொல்லப்பட்டு யுத்தம் முடிவுக்கு வந்த செதியாகும். இச்செய்தி மே மாதம் 19ஆம் திகதி வெளியிடப்பட்டது. சிங்களப் பத்திரிகைகளில் ஒரு பத்திரிகை மாத்திரம் 18ஆம் திகதி பிரபாகரனின் மரணத்தை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. அதில் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் ஒருபுறம் செய்தி அறிக்கையிடலின் போது முக்கிய விடயமாக கருதப்படும் டபிள்யூ 5 மற்றும் எச்.ஒன்று என்ற நியாயங்களை கடைப்பிடிக்காமல் முதல் நான்கு பந்திகளிலும் தற்கொலை செய்து கொண்டது குறித்து எதுவுமே தெரிவிக்கப்படவில்லை. ஐந்தாவது பந்தியில் மறைந்திருக்கும் பங்கருக்கருகே படையினர் வந்தால் தனது வீரர்களுடன் உடற்பகுதிகள் எதுவும் மிஞ்சாதவகையில் குண்டை வெடிக்கப்போவதாக படையினருக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுவும் தகவல் மட்டுமே. அறிக்கையிடலில் தொழில்சார் நிபுணத்துவம் இல்லாவிட்டால் தொகுப்பு ரீதியான பிரச்சினை இருப்பது குறித்த சாட்சியை வழங்கி அச்செய்தியின் இறுதிப்பகுதியில், 17ஆம் திகதி இடம்பெற்ற பாரிய வெடிப்பின் காரணமாக பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அனுமானம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே பத்திரிகை 19ஆம் திகதி தலைப்புச் செய்தியை அறிக்கையிடலிலும் தொழில்சார் நிபுணத்துவம் குறித்து மேலும் சிந்திக்கும் வகையிலான அறிக்கையிடலை மேற்கொண்டிருந்தது. 18ஆம் திகதி செய்தியை அறிக்கையிட்டதைப் போலல்லாமல் அன்றைய தினம் முதற்பந்தியில் சாராம்சம் வெளியிடப்பட்டிருந்த போதும் தொகுப்பதில் குறைபாட்டை காணக்கூடியதாகவிருந்தது. ஒரு விடயத்தை மீண்டும் மீண்டும் தெரிவிக்கும் வகையில் இச்செதி எழுதப்பட்டிருந்தது. அறிக்கையிடலில் போட்டியிருந்தாலும் இதேபோல் தமக்கே வியப்பளிக்கும் செதியாகவிருந்தாலும் அதை அறிக்கையிடும் போது கலவரமடைவது அறிக்கையிடலில் குறைபாடுகள் ஏற்படக் காரணமாகவிருக்கலாம். இது ஒரு உதாரணம் மட்டுமே.
மேற்கண்ட பத்திரிகை தவிர்ந்த ஏனைய மூன்று சிங்களப் பத்திரிகைகளும் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை மே 19ஆம் திகதி தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. அதேபோல் முதல் பக்கத்தில் அரைப்பகுதி, நான்கில் மூன்று பகுதி அல்லது மூன்றில் இரண்டு பகுதி தலைப்புச் செய்திக்காக ஒதுக்கி தமது உள்ளக்கிடக்கையை வாசகர்களுக்கு உணர்த்தியிருந்தன. செய்தி சிறியதாக இருந்த போதும் முக்கிய நிகழ்வொன்றை அறிக்கையிடுவதைப் போன்று பெரிய கறுப்பு எழுத்துக்களை பயன்படுத்தியிருந்தன. சில பத்திரிகைகள் கறுப்பு நிற பின்னணியின் வெள்ளை எழுத்துகளையும் உபதலைப்புகளுக்கு வேறு நிறங்களின் பின்னணியில் வெள்ளை எழுத்துகளையும் பயன்படுத்தியிருந்தன. கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புலிகளின் தலைவர்கள் உயிரோடு இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் சார்ள்ஸ் அன்ரனியின் சடலத்தின் புகைப்படங்களையும் சகல பத்திரிகைகளும் வெளியிட்டிருந்தன. சில பத்திரிகைகள் இச்சம்பவம் தொடர்பான தங்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தும் நோக்கில் பத்திரிகையின் பெயரைக் (Head piece) கூட வழமையை விட மாற்றி வெளியிட்டிருந்தது. ஒரு பத்திரிகை இரு தினங்களிலும் வர்ணத் தேசிய கொடியைப் பின்னணியாக கொண்டு தலைப்புச் செதியை வெளியிட்டிருந்தது மற்றுமொரு பத்திரிகை ஒன்றுபட்டநாடு, ஒரு கொடி என்ற சொற்களுடன் வர்ணத் தேசிய கொடியையும் பின்னணியாக வலதுபுறமும் ஜனாதிபதியின் புகைப்படத்தை இடதுபுறமும் அச்சிட்டு பத்திரிகையின் பெயரை நடுவில் அச்சிட்டிருந்தது. இதுபோன்ற பக்க வடிவமைப்பைப் போலவே தலைப்பு மற்றும் செய்தியை அறிக்கையிடும் போது தெரிந்தோ தெரியாமலோ தமது கருத்தையும் அதில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது. பிரபாகரனது உடல் கண்டுபிடிக்கப்பட்டதை புகைப்படங்களுடன் சகல பத்திரிகைகளும் மே 20ஆம் திகதி முதற்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தன. அன்றைய தினம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. அன்றைய தினமும் பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை ஒருபத்திரிகை மாத்திரம் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஒரு பத்திரிகை தவிர்ந்த ஏனைய பத்திரிகைகள் பிரபாகரன் கொல்லப்பட்ட விதம் குறித்து கட்டுரைகள், புகைப்படங்களை வெளியிட்டிருந்தன. அத்துடன் சில நாட்கள் கடந்த பின்னரும் தமது வாசகர்களுக்காக புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. ஒரு பத்திரிகை முதற்பக்கச் செதியாகவும் மற்றுமொரு பத்திரிகை தலைப்புச் செய்தியாகவும் பிரபாகரன் கொலையுண்ட செய்தியை வெளியிட்டிருந்தன. நாளாந்த பத்திரிகைகளில் விசேடமாக எதுவும் வெளிவராத போதும் ஒரு செதியில் ஊடகங்களில் மாறுபட்ட விதத்தில் செதிகளை வெளிவந்ததை குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட்டதன் மூலம் பழைய செய்தியாகவிருந்தாலும் அதைத் திருத்தும் முயற்சியை மேற்கொண்டதையும் காணமுடிந்தது.
ஆங்கில பத்திரிகைகளில் ஒன்றும் பத்திரிகையின் பெயரை (Head piece) தேசியக் கொடியை பின்னணியாக கொண்டு வெளியிட்டிருந்தது. பத்திரிகையின் பெயருக்கடியில் One Nation, One People என்ற பதத்தையும் வெளியிட்டிருந்தது இருந்தும் அந்த பத்திரிகை 19ஆம் திகதிய செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிடவில்லை. ஏனைய நாளாந்த பத்திரிகை இரண்டு அதைத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. 20ஆம் திகதி ஏனைய பத்திரிகை பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை முதற்பக்கச் செய்தியாக வெளியிட்டபோதும் ஒரு பத்திரிகை இச்செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை கட்டுரைகளையும் படங்களையும் பிரசுரித்திருந்தது. சுமார் மூன்று பத்திரிகைகள் சிங்கள பத்திரிகை போலவே தமது கருத்துகளை செய்தியுடன் சேர்த்து வெளியிட்டிருந்தன.
சிங்கள, ஆங்கில பத்திரிகைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் தமிழ்ப் பத்திரிகைகள் இச்செய்தியை தமது கருத்துகளை சேர்க்க முற்படவில்லை. இருந்தும் ஒரு பத்திரிகை முதல் இரண்டு நாட்களிலும் பிரபாகரனின் மரணம் குறித்து அறிக்கையிடும் போது, இதை அவ்வளவாக ஏற்றுக்கொள்ள முடியாதென்ற கருத்தை வெளிப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டதை அவதானிக்ககூடியதாகவிருந்தது. தலைப்புச் செய்தியை விட ஏனைய செய்திகளை ஆய்வு செய்த போது இதுவிடயம் தெளிவாக தெரிந்தது. மே 19ஆம் திகதி 4 நான்கு தமிழ்ப் பத்திரிகைகளும் பிரபாகரன் இறந்த செய்தியை தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தன. 20ம் திகதி உடல் கண்டுபிடிக்கப்பட்டதை முதற்பக்கச் செதியாக வெளியிட்டிருந்தன.
இருந்தும் சிங்கள பத்திரிகைகள் நாளாந்த ஆங்கில பத்திரிகை போல் அதீத முக்கியம் கொடுத்து முதற்பக்கத்தில் பெருமளவு இடத்தை ஒதுக்கவில்லை. சாதாரணமாக தலைப்புகளை வெளியிடும் விதத்திலே அப்பத்திரிகைகள் இச்செய்தியையும் வெளியிட்டிருந்தன. அரச பத்திரிகைகள் மாத்திரம் இதற்கு பெரிய சிவப்பு நிற எழுத்துகளைப் பயன்படுத்தியிருந்தன. ஏனைய பத்திரிகைகள் போலவே பிரபாகரனது உடலின் புகைப்படத்தை 20ஆம் திகதி தமிழ்ப் பத்திரிகைகள் செதியுடன் வெளியிட்டிருந்தன. வாரம் முழுவதும் வெளிவந்த பத்திரிகைகளின் எண்ணிக்கை 28ஆக இருந்த போதும் முதலாம் நாள் 6 புகைப்படங்கள் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்தன. சிங்கள் பத்திரிகைகள் 31 இல் குறைந்த பட்சம் பெரிய சிறியளவிலான 27 புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. ஆங்கில பத்திரிகைகள் 24இல் 23 வர்ணப் புகைப்படங்களும் 7 கறுப்பு வெள்ளை புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.
பிரபாகரன் அம்புலன்ஸ் வண்டியில் தப்பிச் செல்லும் போது கொல்லப்பட்டதாக 19ஆம் திகதி அநேகமான பத்திரிகைகளைப் போல் இலத்திரனியல் ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. சிலர் அது வான் என்றும் குண்டு துளைக்காத வாகனம் என்றும் குறிப்பிட்டிருந்தன. கொல்லப்பட்ட விதம் குறித்து உறுதியாக எதுவும் குறிப்பிடாமல் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னர் கூறப்பட்டதைப் போல் முதலில் ஒரு சிங்களப் பத்திரிகை தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டதுடன் பின்னர் அதே பத்திரிகை ஒரு செய்தியில் மிக மோசமான விதத்தில் இறுதி நேரத்தில் வீரனைப் போல் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்த பிரபாகரன் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் துடித்து ஒரு கோழையைப் போல் படையினரின் துப்பாக்கில் வேட்டில் கொல்லப்பட்டதாக இவ்வாறு தலைப்புச் செய்தி வெளியிட்ட தாம் ஏற்கனவே வெளியிட்ட செதி அன்றளவில் மாறுபட்டிருப்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. தமிழ்ப் பத்திரிகைகள் 19ஆம் திகதிய செய்திகளை மேற்படி செய்தி தமதல்லவென்பதை தலைப்புச் செய்தியிலும் கூட பொறுப்புடன் காட்டியிருந்தது. ஏனைய மொழி பத்திரிகைகள் விட்ட தவறை இவை தவிர்த்துக் கொண்டன. அரச பத்திரிகை தவிர்ந்த ஏனைய பத்திரிகைகள் மூன்றும் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அரசு கூறுகிறது என்ற கருத்துப்பட தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தன. தமது கருத்தை அதில் திணிக்க முற்படவில்லை. 20ஆம் திகதி சகல பத்திரிகைகளும் நந்திக்கடல் களப்பு அருகே இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட பிரபாகரனின் உடல் மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட போதிலும் முன்னர் தாம் அறிக்கையிட்டது. இடம்பெற்ற தவறை எந்த பத்திரிகையும் குறிப்பிட்டு காட்டவில்லை. இவ்வாறான ஊடகப் பாவனையில் ஏற்படும் கவனயீனம், தவறுகள் சில வேளைகளில் ஊடக ஒழுக்கநெறிகளை மீள்வது குறித்து ஆராவதற்கு மேற்கூறியவாறு அறிக்கையிடலை ஆய்வு செய்வது முக்கியமாகும். இலங்கையில் பலர் வாசித்த, பார்த்த, கேட்ட இச்செய்தியை விரிவாக ஆராந்தால் ஊடகவியலாளர்கள் உதாரணங்களுடன் பகுத்தறிய முடியும். எப்படியிருந்தும் எம்மால் காட்டப்பட்ட உதாரணங்களுக்கு மேலாக இலத்திரனியல் செயற்பாடு அதைப்போல் அனைத்து ஊடகச் செயற்பாடுகளையும் ஆவு செய்வதில் ஊடகங்கள் சமூகத்துக்கு தமது கருத்துகளையும் திணிக்க முயற்சித்திருப்பதை காணக்கூடியதாகவிருந்தது.
சீதா ரஞ்சனி
0 விமர்சனங்கள்:
Post a Comment