கொடுங்கோல் அழிய கொடிபிடிப்பர் பார்
மண்டியிட்டு சரணடைந்து மாண்டுபோன புலிகள் போய்..
பிஞ்சுகளின் உறவுகளை பிணமாக்கி.. இறுதியிலே
அகதியாய் வேடமிட்டு உன் அரவணைப்பு தேடி வந்துள்ளார்
சிங்கக்கொடியை கொடு சிம்மாசனமும் கொடு.. அவர்
கையைப் பிடித்து தமிழினத்தின் கண்ணில் குத்து
உலகுக்கு பறைசாற்று.. கையேந்து
ஒட்டு மொத்த இலங்கையையும் அடகுவை
எரிமலையை மிதித்து வந்த…பிஞ்சுகள்
பாதத்து வெந்தபுண் ஆறவில்லை
வெடித்து சிதறிய குண்டுக்குள்…தாய்
இறக்கைக்குள் காத்த குஞ்சுகள்
கழுத்தளவு நீரில் காவி
கரைசேர்த்த கண்மணிகள்…கைகளிலே
சிங்கக்கொடி திணித்து
சீண்டுகிறான் ராசபக்ச…….
எம் பிஞ்சுகளிடம்
பிரித்தெடுத்த பெற்றோரைக்கொடு……..
சுற்றிப்போட்ட முள்வேலியை எடு……..
உடன் பிறந்த உறவுகளுடன் வாழவிடு……
ஒடித்திரிந்த மண்ணில் உலாவவிடு…
பிடித்த நிலத்தில் இராணுவ முகாம்களை அகற்று
குண்டழித்த பாடசாலைகளைக் கட்டி தா
குழந்தைகளைப் படிக்கவிடு சுதந்திரமாய்…….
கங்கா
0 விமர்சனங்கள்:
Post a Comment