“நாடு கடந்த தமிழீழ அரசு“ என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கின்றது: சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா
`நாடு கடந்த தமிழீழ அரசு` என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரியம் அளிக்கின்றது.“நாடு கடந்த தமிழீழ அரசு” என்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தச் சம்பந்தமும் கிடையாது என்று யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி, என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (ஜூன் 18) வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக் கப்பட்டிருப்பவை வருமாறு:
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பு ஆச்சரி யம் அளிக்கின்றது. இந்த நடவடிக்கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு விதத்திலும் தொடர்புபட மாட்டாது. எவரும் எந்தவொரு நிகழ்ச்சி நிரலையும் எம்மீது திணிக்க முடியாது.
எமது இனத்தின் மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொறுப்புணர்வோடு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை வென்றெடுக்கும் ஒரே குறிக்கோளையே கொண்டிருக்கின்றது.
இலங்கைத் தீவு ஓரே நாடு என்ற அரசியல் வரையறைக்குள் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகளை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வு ஒன்றை எட்டும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். இந்த அரசியல் போராட்டத்தில் பொது வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் நாமே தீர்மானிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.






0 விமர்சனங்கள்:
Post a Comment