பாராளுமன்ற விடுமுறை மேலும் நீடிப்பது ஏற்கப்படாமையால் பத்மினி சிதம்பரநாதன் லண்டனிலிருந்து கொழும்பு திரும்புகிறார்
கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரது விடுமுறையை மேலும் நீடிப்பதை பாராளுமன்றம் ஏற்றுக் கொள்ளாமையால் பத்மினி சிதம்பரநாதன் லண்டனிலிருந்து இன்று கொழும்பு திரும்புகிறார்.
வெளிநாடுகளில் தற்போது தங்கியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரில் மூன்று பேர் தமது விடுமுறைக்கான பிரேரணைக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக வைத்திய சான்றிதழ்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (ஜூன் 10) குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறையை மேலும் நீடிப்பது தொடர்பான பிரேரணை சபையில் முன் வைக்கப்பட்ட போது ஆளும் தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது அனுமதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்திருந்தார்.நேற்று மாலை சபாநாயகருடன் இடம் பெற்ற சந்திப்பில் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வைத்திய அறிக்கை சமர்ப்பிபது பற்றி பேசப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.
நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி (லண்டன்) , செல்வராஜா கஜேந்திரன் (நோர்வே), செல்வம் அடைக்கலநாதன் (இந்தியா) ஆகியோர் தமது வைத்திய அறிக்கைகைய அனுப்பி வைத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கின்றார்.
அவரது தகவலின் படி மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் லண்டனிலிருந்து தற்போது நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றார் .நாளை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிப்பார் என தெரிகின்றது.
0 விமர்சனங்கள்:
Post a Comment