தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் சுதந்திர குழுவாக இயங்க முடிவு
இலங்கை பாராளுமன்றின் அடுத்த அமர்வுக்கு முன்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினுள் பிளவு ஏற்படும் சாத்தியம் இருப்பதாக கூட்டமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடைமுறை செயற்பாடுகள் அதன் கனிஷ்ட்ட பிரதிநிதிகளுக்கு இருட்டடிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் கனிஷ்ட்ட பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாண மாநகர சபை தேர்தல்கள் வரும் வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியாவில் என்ன செய்கிறார்கள் எனவும் அதன் கனிஷ்ட்ட பிரதிநிதிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கிடையில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் தலைமையிலான குழு ஒன்று அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாக அரசாங்கம் சார்ந்த இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை விடுத்து சுதந்திர குழு ஒன்றாக இயங்க திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment