மாவீரர் குடும்பங்களுக்கு புலிகள் வழங்கிய காணிகளை மீளப்பெற அரசு தீர்மானம்!!
வடக்கில் மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளை மீள சுவீகரித்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக காணி அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட காணிஅதிகாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பொருளாதர ரீதியாக பெறுமதிவாய்ந்த காணிகளை புலிகள் சட்டவிரோதமாக கைப்பற்றி மாவீரர் குடும்பங்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலைப்புலிகளின் இராணுவ முகாம்கள் விமான நிலையங்கள் விமானஓடுபாதைகள் வேறும் நிர்வாகக் கட்டிடங்கள் என்பவற்றையும் அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 விமர்சனங்கள்:
Post a Comment