பிரபாகரனின் மனைவி மதிவதனி கனடாவுக்குத் தப்பிச் சென்றார் என்கின்றன சில இந்திய ஊடகங்கள்.. இது புரளி என்கின்றனர் அதிகாரிகள்!!
பிரபாகரனின் மனைவி மதிவதனி விமானம் மூலம் வெளிநாடு செல்ல உதவிய பாஸ்போட் திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வசந்தி க.பெ.மாரிமுத்து, ஜெகதாப்பட்டிணம் ஆவுடையார் கோவில் தாலுகா புதுப்பேட்டை மாவட்டம் என்ற பெயர் மற்றும் முகவரியில் எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது எனவும் இதுதொடர்பாக டெல்லி இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்பு அதிகாரிகள் திருச்சி மண்டல பாஸ்போட் அலுவலகத்தில் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள் எனவும் மதிவதனிக்கு வழங்கப்பட்ட பாஸ்போட் தொடர்பான ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றதாகவும். இதுதொடர்பான விசாரணைக்காக கடந்த வாரம் திருச்சி பாஸ்போர்ட் அலுவலர் பாலசந்திரன் டெல்லி சென்று வந்தார் எனவும் சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுபற்றி பாலசந்திரனிடம் கேட்டபோது அவர் தெரிவிக்கையில் திருச்சி மண்டல பாஸ்போட் அலுவலகம் மூலம் தினமும் 500பாஸ்போட்டுகள் வழங்கப்படுகின்றன. பாஸ்போட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் சமர்ப்பிக்கும் 15ஆவணங்கள் உண்மையாக உள்ளனவா? என்பதை சரபார்த்த பிறகு பாஸ்போட் வழங்கப்படும். அதேபோன்று சம்பந்தப்பட்ட நபர் நேரில் வந்தால் தான் பாஸ்போட் வழங்கப்படும்.
மதிவதனிக்கு பாஸ்போட் வசந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டது என்று கூறப்படுவது உண்மையில்லை நான் டெல்லி சென்றது எனது பதவி உயர்வுக்காக அதாவது கொச்சின் அலுவலக பொறுப்பு ஏற்பது தொடர்பாகத் தான். யார் இந்த புரளியை பரப்புகிறார்கள் என்பதும் தெரிய வரவில்லை என அவர் கூறினார். அதேபோன்று கியுபிரிவு பொலிஸாரும் இதை புரளி என்று கூறினார். இதுதொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தில் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும் கூறினார்.
இதேவேளை இறுதி வன்னி சமரின்போது விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட அவர்களின் உறவினர்களும் உயிரிழந்ததாக இராணுவத்தரப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
0 விமர்சனங்கள்:
Post a Comment