தமிழகத்திலுள்ள அகதிகளுக்குப் புதிய நிபந்தனை
மோதல்கள் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழக நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்களைத் திரும்பியனுப்புவதற்கு தமிழக அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.
மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவரமாட்டோம் என கியூ பிரிவுப் பொலிஸாருக்கு எழுத்துமூலம் எழுதி வழங்கவேண்டுமெனவும், அவ்வாறு எழுத்துமூலம் வழங்கினாலேய இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பியனுப்பப்படுவார்கள் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய நிபந்தனை தொடர்பாக தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் குழப்பமடைந்திருப்பதாகவும், சிலர் எழுதிக்கொடுத்துவிட்டுத் நாடு திரும்புவது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






0 விமர்சனங்கள்:
Post a Comment