வடக்கு வளர்கிறது
ஒரு பிரதேசத்தின் எழுச்சியும் வீழ் ச்சியும் அப்பிரதேசத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமையிலேயே பெருமள வில் தங்கியுள்ளன. பிரதேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை செலுத்த வேண்டியது அரசியல் தலைவர்க ளின் பிரதான கடப்பாடு.
ஆனால் வட பகுதியின் அரசியல் தலைமை நீண்ட கால மாகச் சமூக, பொருளாதார அபிவிருத்தி யில் சிறிதளவேனும் அக்கறை செலுத்தவி ல்லை. இதனால் வட மாகாணம் ஒப்பீட் டளவில் பின்தங்கிய நிலையிலேயே இரு ந்தது.
வட மாகாணத்தில் ஆயுத பலத்தின் மூலம் புலிகள் காலூன்றியதற்கு முந்திய காலத்தி லேயே அபிவிருத்தியைப் பொறுத்தவரை யில் தேக்கநிலை ஏற்பட்டுவிட்டது. வடக் கைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் தலைவர்கள் அபிவிருத்தியில் சிறிதளவே னும் அக்கறை செலுத்தவில்லை.
தமிழ் மக் களின் அரசியல் உரிமைகளை வென்றெடு த்த பின் அபிவிருத்தியில் கவனம் செலுத்த ப்படும் என்ற வாய்ப்பாட்டையே தொடர்ச் சியாக ஒப்புவித்தார்கள். இவர்களின் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் தலை மையின் அறுவடை வரண்ட வடக்கும் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் மக்க ளும் என்ற நிலையில் முடிந்திருக்கின்றது.
புலிகளின் சர்வாதிகார அடக்குமுறைக்கு வடக்கு உட்பட்ட பின், ஆரம்ப காலத்தில் சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த அபிவிருத்திக் கட்டமைப்புகளும் சேதமாக் கப்பட்டன. காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற் சாலை, ஆனையிறவு உப்பளம் என்பன செயற்பட முடியாத நிலையைப் புலிகள் தோற்றுவித்தார்கள். ரயில் சேவையைச் சீர்குலைத்தார்கள். தரைவழிப் போக்குவர த்தை முடக்கினார்கள். எந்தவொரு அபிவி ருத்தி நடவடிக்கைக்கும் அவர்கள் இடம ளிக்கவில்லை.
புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற் கொண்ட இராணுவ நடவடிக்கை வெற்றி கரமாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வடக்கில் ஒளி வீசத் தொடங்கியிருக்கின் றது. காங்கேசன்துறை வரை ரயில் சேவையை ஆரம்பிக்கும் திட்டம் மிகத் துரிதமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஒரு வருடத்துக்குள் இந்த ரயில் சேவை ஆரம் பிக்கப்படுமென இதற்குப் பொறுப்பான அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறுகின் றார். வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு முப் பது புதிய கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் அண்மையில் கூறினார்.
இவ்வாறாக ஒவ்வொரு அமைச்சும் அதன் அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்க ளில் வட மாகாண அபிவிருத்திக்குப் பங் களிப்புச் செய்கின்றன. இதேநேரம், வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சகல வசதிகளுடனும் கூடிய உட்கட்டமை ப்புச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வுள்ளதாக வட மாகாண அபிவிருத்திக் கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜ பக்ஷ கூறினார்.
யாழ்தேவி ரயில் சேவை தாண்டிக்குளம் வரை நீடிக்கப்பட்டமை தொடர்பான நிகழ்வில் உரையாற்றுகை யிலேயே அவர் இவ்வாறு கூறினார். வட பகுதி மக்களின் நாளாந்த வாழ்வுக்கான அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்று வதற்கு அவசியமான உட்கட்டமைபபு வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற அதே வேளை சமூக, பொருளாதார வளர்ச்சிக் கான அபிவிருத்தித் திட்டங்களும் துரித கதியில் நிறைவேற்றப்படவுள்ளன.
வடபகுதி மக்களுக்கு இதுவரை தலைமை வகித்த மிதவாதத் தலைவர்களும் சர்வாதி காரப் புலிகளும் மக்களைப் படுகுழியில் தள்ளினார்களேயொழிய அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வடக் கின் வளர்ச்சி இப்போதுதான் ஆரம்பித்தி ருக்கின்றது. மக்களுக்கு நன்மை பயக்கும் தலைமை எது என்பதை மக்கள் இப் போது இலகுவாக இனங்காண முடியும். அத் தலைமைக்குக் கைகொடுத்து வடக் கின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டிய கடப்பாடு மக்கள் அனைவருக்கும் உண்டு.
thinakaran
0 விமர்சனங்கள்:
Post a Comment