பிரான்ஸ் தள வைத்திய சேவை முடிவுக்கு வந்தது
வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் செயற்பட்டு வந்த பிரான்ஸ் அரசாங்கத்தின் தற்காலிக தள மருத்துவமனையின் சேவைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. நூறு கட்டில்களை கொண்டு இயங்கிய இந்த தள வைத்தியசாலையில் சுமார் 2500 காயமடைந்த சிவிலியன்களுக்கு சிகிச்சையளித்துள்ளதாகவும் 250க்கும் மேற்பட்ட சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டதாகவும் அந்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரான்ஸ் தூதரக பேச்சாளர் தொடர்ந்து ஏ.எப்.பி.க்கு கருத்து வெளியிடுகையில், உள்ளக இடம்பெயர்வுக்குள்ளான மக்களுக்கு உதவி வழங்கும் எமது சேவை நோக்கம் 45 நாட்கள் பணியுடன் முடிவடைந்துள்ளது. எமது கடமையை செய்துள்ளோம். எனினும், சர்வதேச நிவாரண முகவர் நிலையங்கள் ஊடாக பிரான்ஸ் அரசாங்கத்தின் மனிதாபிமான உதவிகள் எதிர்காலத்திலும் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேனார்ட் குச்னருக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து பிரான்ஸ் அரசாங்கத்தின் தள வைத்தியசாலை செட்டிகுளத்தில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது
0 விமர்சனங்கள்:
Post a Comment