அடேல் பாலசிங்கம் போர் குற்றவாளி: சாட்சியமளிக்க தமிழினி தயார்
அடேல் பாலசிங்கம் புலிகளால் பலவந்தமாக தமது இராணுவ அமைப்புக்குள் சேர்க்கப்பட்ட பெண் குழந்தைப் போராளிகளுக்கும் மற்றும் பெண் புலிகளுக்கும் சயனைட் குப்பிகளை வழங்கி இலங்கையில் பயங்கரவாதம் தலைவிரித்தாட ஓர் ஊக்கியாக செயல்பட்டுள்ளதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அரசைக் கோரியுள்ளது.
அத்துடன், இலங்கை அரசு அடேல் பாலசிங்கம் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் உள்ளது. அடேல் பாலசிங்கத்துக்கு எதிராக சாட்சியம் அளிக்க இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் பெண்கள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடேல் பாலசிங்கம் போர் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தும் வீடியோகள் சிலவற்றை புலிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள அவர் இறையாண்மையுள்ள நாட்டை அழிக்க பயங்கரவாத புலிகள் தலைமைத்துவத்திற்கு உதவி உள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. இதனை தவிர புலிகளின் தலைமைத்துவத்தினால் கொலை செய்யப்பட்டவர்கள், அந்த கொலை தொடர்பான தகவல்களையும் அடேல் பாலசிங்கம் முன்கூட்டியே அறிந்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
0 விமர்சனங்கள்:
Post a Comment